வாழ்வாதார கடன் வழங்கும் கதை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் கதைக்கபடும் பின்னர் அதுபற்றி கதைக்க மாட்டார்கள். இதனால் நாங்கள் உளரீதியாக துன்புறுத்தப்படுகின்றோம்- முன்னாள் போராளிக

408

யாழ்.மாவட்டத்தில் முன்னாள் போராளிகளுக்கு வங்கி கடன்களை வழங்குகிறோம் என்ற போர்வையில் புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகள் மீள நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், முன்னாள் போராளிகள் பலர் தாம் உளரீதியாக துன்புறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

நவம்பர் மாதம் யாழ்.குடாநாடு மட்டுமல்லாமல், வடகிழக்கு மாகாணங்கள் முழுவதும் அதிக கண்காணிப்பு பகுதிகளாக மாற்றப்படும்.

இந்தநிலையில், யாழ்.குடாநாட்டில் முன்னாள் போராளிகளுடைய வீடுகளுக்குச் செல்லும் புலனாய்வாளர்கள் தாங்கள் புனர்வாழ்வு அமைச்சிலிருந்து வருவதாக கூறுவதுடன், எங்கிருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள், தொலைபேசி இலக்கத்தை மாற்றவேண்டாம்.

மாற்றினால் எமக்கு அறியத்தர வேண்டும் என கூறும் சம்பவங்கள் கடந்த சில தினங்களாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரியவருகின்றது.

இது குறித்து முன்னாள் போராளிகள் சிலர் தெரிவிக்கையில்,

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் வழங்கப் போவதாக கூறிய வங்கி கடன்களை இன்றுவரையில் வழங்கவில்லை.

ஆனால் மாதத்திற்கு ஒருமுறை எங்கிருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? எதற்காக திருமணம் முடிக்காமல் இருக்கிறீர்கள்? எதற்காக இந்த வேலையில் இருக்கிறீர்கள்? தொலைபேசி இலக்கங்களை மாற்ற வேண்டாம் என பல கேள்விகளையும் கட்டளைகளையும் போடுகின்றார்கள்.

சில சமயங்களில் நாங்கள் வெளியில் சென்றிருந்தால், நேரடியாக வீட்டுக்கு போகும் அவர்கள் கடுமையாக விசாரிக்கிறார்கள்.

அதனால் வீட்டில் உள்ளவர்கள் அச்சத்தில் இருக்கின்றார்கள். மேலும் இது நவம்பர் மாதம் என்பதனால் கடுமையான விசாரணைகள் அடிக்கடி நடப்பதுடன், வாழ்வாதார கடன் வழங்கப் போவதாகவும் கூறுக்கின்றார்கள்.

இந்த வாழ்வாதார கடன் வழங்கும் கதை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் கதைக்கபடும் பின்னர் அதுபற்றி கதைக்க மாட்டார்கள். இதனால் நாங்கள் உளரீதியாக துன்புறுத்தப்படுகின்றோம் என தெரிவித்தனர்.

 

SHARE