விக்னேஸ்வரனின் கருத்து நல்லிணக்கத்திற்கு எதிரானது! “எழுக தமிழ்” மக்கள் எழுச்சிக்குப் பின்னர் வாய் திறந்தார் சுமந்திரன்

266

 

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எழுக தமிழ் பேரெழுச்சியில் தெரிவித்திருக்கும் கருத்து நாட்டின் நல்லிணக்கத்திற்கு எதிரானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

14462789_1790896197859967_618354409259817081_n 14484747_1588325924803376_4529862939995824233_n

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி நடைபெற்றிருந்தது.

குறித்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவையும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான கண்டனங்களையும் வெளியிட்டிருந்தனர்.

பேரணியின் இறுதியில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் சுமந்திரன்,

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, நாம் அதில் கலந்துகொள்ள வில்லை.

இன்றைய தினம் வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்து நாட்டின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எதிரானது.

நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் தெற்கு மக்களுக்கு தவறான ஒரு கருத்தை கொடுப்பதாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE