விடுதலைப்போராட்ட பாதையில் ஒரு தடைக்கல்லாக, குத்துக்கல்லாக இந்திய அரசால் கொண்டு வந்து இறக்கப்பட்டதே மாகாணசபை முறைமையாகும்.

388
 Elam-198
“உண்மையான மக்கள் விடுதலையை நேசிக்கின்ற எந்தவொரு விடுதலைப்போராளியும் சிறீலங்கா அரசின் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு இலங்கைத்தீவில் எந்தவொரு தேர்தலையும் சந்திக்கவும் மாட்டான். எந்தவொரு இடைக்காலத்தீர்வையும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டான்”
DSC_0078
 
இவ்வாறு கூறிய தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், அதுபோலவே ஒரு உண்மையான விடுதலைப்போராளியாக வாழ்ந்தும் காட்டியிருந்தார். பரிணமித்துமிருந்தார். அவர் வழிவந்த போராளிகளும் அப்படியே!  
 
மாறாக, இன்று வடக்கிலும் கிழக்கிலும் நாடாளுமன்ற தேர்தல்களையும், மாகாணசபை தேர்தலையும் சந்தித்துவிட்டு, நாளாந்தம் தாம் விடுக்கும் அறிக்கைகளில் தம்மை போராளிகளாகவும் வீரர்களாகவும் காட்டிக்கொண்டு பிழைப்பு நடத்துபவர்கள், அவர்கள் Primary School போகும் வயசில் A for Apple, B for Ball, C for Cat என்று Primary Teacher சொல்லிக்கொடுத்த போது, T for Tiger என்று திக்குவாயால் உச்சரித்தது மட்டுமே உண்மை. அன்று T for Tiger என்று திக்கித்திக்கி உச்சரித்ததோடு சரி, அதற்குப்பின்னர் வரிச்சீருடையுடனோ, புலிகள் அமைப்புடனோ, அமைப்பின் கொள்கையுடனோ எந்த ஒட்டுறவும் கிடையவே கிடையாது.   
 
ஆனால் இன்று வலிந்து மேடைகள் போட்டு வீரப்பேச்சுகள் பேசிக்கொண்டு திரியும் இவர்கள், ஏதோ மாகாணசபை தான் தமிழர் இனப்பிரச்சினைக்கு முடிந்த முடிபு என்ற மாயையை கட்டியெழுப்பி வருகின்றனர். போதாக்குறைக்கு பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் பற்றியெல்லாம் அடிக்கடி பீற்றுகின்றனர். “ஏலே! ஆளுநர் மட்டும் இல்லாமல் இருக்கணும், அப்படியே ஆட்டி அசைச்சு பிடுங்கி வைச்சிருவமெல்லே” என்று கொடுக்கப்படும் பில்டப்புகள் வேறு.
 
இன்று இல்லாத பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் பற்றியெல்லாம் கற்பனைவாதத்தில் மிதக்கின்றனர். ஆளாளுக்கு எதைஎதையெல்லாமோ உளறுகின்றனர். ஆனால் 1987ம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்குப்பின்னர் ஏற்படுத்தப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு அன்று பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால், பொலிஸ் உத்தியோகத்தில் யார் இருந்திருப்பார்கள்?
 
வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்க வேண்டாம் என்று 1989ம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் அன்றைய ஜனாதிபதி பிரேமதாஸவிடம் வலியுறுத்தியுள்ளார். அதற்கு காரணம், வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால், வடக்கு கிழக்கு மாகாண பொலிஸில் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களே இருப்பார்கள் என்பது தலைவரின் கணிப்பாக இருந்துள்ளது. 
 
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தனிநாட்டு(ஈழக்) கோரிக்கையை தணிக்கும், நலினப்படுத்தும் நோக்கத்தில், விடுதலைப்போராட்ட பாதையில் ஒரு தடைக்கல்லாக, குத்துக்கல்லாக இந்திய அரசால் கொண்டு வந்து இறக்கப்பட்டதே மாகாணசபை முறைமையாகும்.
-கவரிமான்-    

 

SHARE