காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் நிலைப்பாட்டை புதிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்த போராட்டம் எதிர்வரும் 10-ம் திகதி காலை 10.30 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெறும் என்று காணாமல் போனோரை தேடியறியும் குழு தெரிவித்துள்ளது.
மேலும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அரசியல் கைதிகளின் உறவினர்கள் காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.