வித்தியாவின் வழக்கில் நடப்பது என்ன?-தேர்தல் அரசியல் செய்த அரசியல் வாதிகள் சற்று சிந்தியுங்கள்

678

 

வித்தியாவின் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. வித்தியாவின் கொலை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கமானது, சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிக் கொடுக்கும் சட்ட நடவடிக்கைகளிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

625-500-560-350-160-300-053-800-900-160-90 11268926_10152914768700060_121378269_n 11358735_10152914768675060_367672848_n

எதிர்காலம் பற்றிய கனவுகளை மனதிலும் புத்தகப் பையை கையிலும் சுமந்தவாறு தன்னந்தனியே சென்ற அந்த மாணவியை பற்றைக்குள் இழுத்தச்சென்று சீரழித்த வெறிநாய்க் கூட்டங்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மக்களின் ஆர்வம் எதிர்பார்க்க கூடியதே.

இந்நிலையில், குறித்த வழக்கு விசாரனை தொடர்பில் வெளி வருகின்ற செய்திகளும் ஊடக அறிக்கைகளும் சமூக வலைத்தளங்களின் பதிவுகளும் சாதாரண மக்களை குழப்பமடையச் செய்துள்ளமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

வித்தியாவின் வழக்கினில் ஏதொவொரு வகையில் சம்மந்தப்பட்டிருக்கின்ற ஒவ்வொருவரும் முரண்பாடான கருத்துக்ளை வெளியிட்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இறுதியாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கடந்த 15ம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தென்னிலங்கையை சேர்ந்த மூன்று சட்டத்தரணிகள் சமூகமளித்திருந்தமை பல்வேறு மட்டங்களிலும் வாதப்பிரதி வாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

குறித்த சட்டதரணிகள் நீPதிமன்றத்தில் ஆஜராகியிருந்த போதிலும், சம்பந்தபட்ட வழக்கில் எந்தவொரு தரப்பின் சார்பிலும் ஆஜராகாமல் வெறும் பார்வையாராகவே அமர்ந்திருந்தனர். சட்டதரணிகள் பொதுவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதாரவாக அல்லது குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதாரவாக ஆஜராவது பொதுவான நடைமுறையாகும். ஆனால் இவர்கள் வெறுமனே பார்வையாளராக இருந்தமை அங்கே கூடியிருந்தவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சட்டத்தரணிகளை அழைத்து வந்த ஜக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் துவாரகேஸ்வரனின் கருத்துபடி, முன்னைய வழக்கு விசாரனைகளின் நகர்வு தனக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தியதால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராவதற்காக குறித்த சட்டதரணிகள் அழைத்து வரப்பட்டதாகவும், ஆனால் வித்தியாவின் குடுப்பத்தினரிடமிருந்து சம்பந்தப்பட்ட ஆவணங்களில் கையொப்பம் பெறுவதற்கு போதிய காலஅவகாசம் இல்லாமையினால் அவர்களால் ஆஜராக முடியில்லை என்றும் தெரிவிக்கின்றார்.

அதேவேளை குறித்த வழக்கில் வித்தியாவின் குடும்பத்தின் சார்பில் ஆஜராகியிருக்கும் சிரேஷ்ட சட்டதரணி கே.வி தவராசாவின் கதை வேறு விதமாக இருக்கின்றது.

அவரின் கருத்துபடி குறித்த மூன்று சட்டதரணிகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதரவானதாக அல்லது அதராவான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் வருகை தந்திருக்க வேண்டும் என தெரிவிக்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த மூன்று சட்டத்தரணிகளும் குற்றஞசாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆஜராவதற்கு போதிய பாதுகாப்பு யாழ்ப்பாணத்தில் இல்லை என ஓரு சத்தியக் கடதாசியை சமர்ப்பிப்பார்களாயின் அடுத்த தவணையிலேயே குறித்த வழக்கு தென்பகுதிக்கு மாற்றப்பட்டு குறித்த வழக்கு தொடர்பில் தற்போது காணப்படுகின்ற உணர்வு ரிதியான பாதிப்பு நீக்கப்பட்டு ஆயிரத்தில் ஒரு வழக்காக வீரியம் குறைக்கப்படுவதற்கான வாய்;;ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றார்.

எதுஎப்படியிருப்பினும்;, தற்போது நடைபெற்று வருகின்ற வித்தியாவின் கொலை வழக்கை பொறுத்த வரையில், குற்றங்சாட்டப்பட்டவர்களுக்கெதிராக அரசாங்கமே வழக்கை தாக்கல் செய்திருக்கின்றது. அதன் முதல் கட்ட விசாரணைகளாக தற்போது மரண விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

பொதுவாக நீதவான் நீதிமன்றங்களில் வழக்குதொடுநர் தரப்பாக பொலிஸாரே வழக்கை நெறிப்படுத்துவது வழமை. சில வழக்குகளின் முக்கியதுவம் கருதி மட்டும் சட்டமா திணைக்களத்தின் அரச சட்டதரணிகள் ஆஜராவார்கள். அந்த வகையில் வித்தியாவின் வழக்கிலும் சட்டமா திணைக்களத்தினால் அரச சட்ட தரணிகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். அவர்களே குறித்த வழக்கினை நெறிப்படுத்தியிருந்தனர். எதிர்காலத்தில் நெறிப்படுதவும் உள்ளனர்.

வித்தியாவின் சார்பாக ஆஜராகி இருக்கின்ற சிரேஷ்ட சட்டதரணி தவராசா ஆகினும்சரி, (துவாரகேஸ்வரன் கூறுவதுபோன்று வித்தியாவிற்காக வாதாட வந்திருந்தால்) தென்னிலங்கை சட்டதரணிகள் ஆகினும்சரி, எவருமே குறித்த வழக்கில் வித்தியாவுக்கு ஆதரவாக நேரடியாக வாதாட முடியாது. இவர்கள் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்து வழக்கை அவதானித்து அதில் ஏதாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதகமான செயற்பாடுகள் நிகழுமாயின் அதனை அரச சட்டதரணிகளுக்கு சுட்டிக்காட்ட முடியும்.

வெளியாகும் சில செய்திகளைப் போல், இவர்கள் குறித்த வழக்கில் தமது வாத திறமைகளை பயன்படுத்தி குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வாங்கி கொடுக்க முடியாது என்பதுதான் உண்மை.

சட்டத்தரணி தவராசா சந்தேகிப்பது போன்று சத்தியக் கடதாசி ஊடாக வழக்கு தென்னிலங்கைக்கு மாற்றப்படுமாயின், ஏற்படக்கூடிய காலதாமதங்கள் சூழல் மாற்றங்கள் என்பன குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தப்புவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும் என்பதும் மறுப்பதற்கில்லை.

யதார்த்தம் இவ்வாறிருக்கையில் ஏட்டிக்கு போட்டியாக வெளிவருகின்ற கருத்துக்கள் மற்றும் செய்திகள் மக்களை குழப்படையச் செய்வதுடன் தேவையற்ற சந்தேகங்களையும் ஏற்படுத்துகின்றது.

குறிப்பாக தென்னிலங்கை சட்டத்தரணிகளோடு ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் துவாரகேஸ்வரன் காட்சியளிக்கும் படங்கங்ளும் அதேபோல், சிரேஷ்ட சட்டத்தரணி தவராசாவுடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் காட்சியளிக்கும் படங்களும் ஊடகங்களில் வெளிவருகின்றன.

அதை விட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வித்தியாவின் கொலைக்கு தற்போதைய அரசின் கையாலாகாத்தன்மையே காரணம் என்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வித்தியாவின் தயாரை சந்தித்து ஆறுதல் கூறுகின்றார்.

எல்லாவற்றிற்கும் மேலாக பாலியல் வன்புணர்வு, மற்றும் கொலை போன்ற குற்றங்களுகளுக்கு தேவையான சட்ட ஏற்பாடுகள் குற்றவியல் சட்டக் கோவையில் தெளிவாக இருக்கின்ற நிலையில் தமிழ் இளைஞர் யுவதிகளை கருவறுக்க கங்கணம் கட்டி உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் உள்நுளைக்கப் பட்டிருக்கின்றது.

இவற்றை எல்லாம், ஒருங்கினைத்து பார்க்கும் மக்கள் வெறி நாய்கள் கடித்து குதறிய வித்தியாவை வைத்து அரசியல் சந்தையில் லாப நட்டங்கள் பார்க்ப்படுகின்றதோ எனச் சந்தேகங்கள் கொள்கின்றனர்.

SHARE