விமான ஊழியரை கொலை செய்ய முயன்ற பயணி

332
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து சிகாகோ செல்லும் விமானத்தில் பயணி ஒருவர் திடீரென்று விமான ஊழியர் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் யுனைடெட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நியூயார்க் நகரில் இருந்து சிகாகோ சென்றுகொண்டிருந்தது.

அப்போது அதில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் விமான ஊழியரை கொலை செய்யும் நோக்கில் தாக்கியுள்ளார்.

சம்பவத்தின்போது குறிப்பிட்ட அந்த பெண் பயணி அதே விமானத்தில் பயணம் செய்த ஒரு ஆண் பயணி ஒருவரை அழைத்து தனது அருகே அமர்ந்து பயணம் செய்யும்படி பணிந்துள்ளார்.

இந்நிலையில் விமான ஊழியர் ஒருவர் அப்போது பயணிகளுக்கு மது பரிமாறிக்கொண்டு வந்துள்ளார்.

குறிப்பிட்ட பயணியின் முறை வந்தபோது விமான ஊழியரின் கவனக்குறைவால் அவர் மீது மது கொட்டியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த அந்த பயணி விமான ஊழியரை கன்னத்தில் அறைந்து கொண்டே கடுமையாக திட்டியுள்ளார்,

மேலும் தவறுதலாக மது கொட்டியதாக கூறிய விமான ஊழியரின் கழுத்தை அந்த பயணி நெரித்துள்ளார்,

விரல் நகங்களால் அவர் ஊழியரின் முகத்தை காயப்படுத்தியும் உள்ளார். இந்த களேபரங்களை கண்ணுற்ற சக பயணிகள் உடனடியாக எழுந்து வந்து கோபத்தில் அலறும் அந்த பயணியை கூட்டாக அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து பயணிகள் வலியுறுத்தியதன்படி டெட்ராயிட் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து ஊழியரை தாக்கிய பயணியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விமான ஊழியர் மற்றும் சகபயணிகளை தாக்கிய குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதியப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

SHARE