விலைமாதுக்களிடம் செல்ல அகதிகளுக்கு இலவச அனுமதி சீட்டு

261
ஜேர்மனி நாட்டில் உள்ள விலைமாதுக்களிடம் செல்வதற்கு அந்நாட்டில் குடியேறியுள்ள அகதிகளுக்கு இலவச அனுமதி சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியை சேர்ந்த வலது சாரி கட்சிகளின் இணையத்தளங்களில் இவ்வாறான அனுமதி சீட்டுக்களின் புகைப்படங்கள் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

‘ஜேர்மனியில் குடியேறியுள்ள அகதிகள் ஒரே ஒரு முறை அவர்கள் விரும்பும் விலைமாதுக்களிடம் செல்வதற்கு இந்த இலவச அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது’ என்ற தகவலுடன் பகிரப்பட்டு வருகிறது.

இதன் உச்சக்கட்டமாக பவேரிய மாகாணத்தை சேர்ந்த சமூக சேவைகள் அலுவலகத்தின் மூலமாக அதிகாரப்பூர்வமான இந்த அனுமதி சீட்டுகள் வழங்கபடுவதாக தகவல்கள் வெளியானது.

அதில், ‘அகதிகளுக்கு வழங்கப்படும் இந்த இலவச அனுமதி சீட்டுகளை திரும்ப மாற்றிக்கொள்ள முடியாது.

திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இந்த அனுமதி சீட்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், கிறித்துவ அரசு விடுமுறை நாட்களிலும் இந்த இலவச அனுமதி சீட்டுகளை பயன்படுத்தலாம் என தகவல்கள் அனுமதி சீட்டுகளின் புகைப்படத்துடன் வெளியானது.

ஆனால், இணையத்தளங்களில் வன்முறையை பிரயோகிப்பதற்கு எதிரான Mimikama என்ற அமைப்பு இந்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

‘அகதிகளுக்கு வழங்கப்படுவதாக கூறப்படும் இந்த இலவச அனுமதி சீட்டுகள் போலியானவை. இந்து இன்று மட்டுமல்ல. கடந்த 2011ம் ஆண்டில் இருந்து அகதிகளுக்கு எதிராக சிலர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, ஜேர்மனியில் உள்ள அகதிகள் இந்த இலவச அனுமதி சீட்டு விவகாரத்தில் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE