விளையாட்டு வினையான சம்பவம்: 6–வது மாடியிலிருந்து தவறி விழுந்த 11 வயது சிறுவன்

283
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மேள் தளத்தில் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் ஒருவன் கால் இடறி 6-வது மாடியிலிருந்து கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு பாரிஸ் நகருக்கு அருகில் உள்ள மோண்ட்ரோக் என்ற நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது.இந்த குடியிருப்பின் 6-வது மாடியில் வசிக்கும் குடும்பத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் எப்போதும் துருதுருவென ஓடி விளையாடிக்கொண்டிருப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்துள்ளான்.இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை அன்று, தனது வீட்டின் மேள் தளத்திற்கு வந்த அந்த சிறுவன் அங்குள்ள சன்னலை பற்றிக்கொண்டு வித்தியாசமாக விளையாட வேண்டும் என திட்டமிட்டுள்ளான்.

அதாவது, ஒரு சன்னலிலிருந்து மற்றொரு சன்னலுக்கு தாவி விளையாடுவதே அவனது திட்டம்.

இவ்வாறு அந்த சிறுவன் ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டிருப்பதை கண்ட பெண் ஒருவர் அதிர்ச்சி அடைந்து அந்த சிறுவனின் தாயாருக்கு தகவல் அளித்துள்ளார்.

ஆனால், சிறுவன் எப்போதும் இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது வழக்கம் என்பதால், அதனை அந்த தாயார் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், சன்னலிலிருந்து தாவும்போது துரதிஷ்டவசமாக கால் இடறி விழுந்துள்ளான்.

6-வது மாடியிலிருந்து அலறியவாறு விழுந்த அவன், இரண்டு தளங்களுக்கு கீழ் உள்ள துணி போன்ற ஒரு தடுப்பனையில் விழுந்ததால், அவனுடைய வேகம் குறைந்து தரையில் மிருதுவாக இருந்த மணல் மீது விழுந்துள்ளான்.

சம்பவம் அறிந்து வந்த மருத்துவ வாகனம் ஒன்று சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், சிறுவனுக்கு கால் முறிவு ஏற்பட்டிருந்தாலும் மணல் மீது விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளான்.

SHARE