வீடுகள் கட்டிக்கொடுத்த பிரான்ஸ் அரசாங்கம் – நிராகரித்த அகதிகள்

303
பிரான்சின் காலேஸ் பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகளுக்கு அரசாங்கத்தால் புது வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.பிரான்சின் காலேஸ் பகுதியில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர், அந்த பகுதியில் வாழ்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த அவர்களுக்கு அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் புதிய வீடுகள் கட்டப்பட்டன.

இந்நிலையில், அங்கிருந்த 1500 அகதிகள் பொலிசார் பாதுகாப்புடன் புதிய குடியிருப்பிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

ஆனால், சில அகதிகள் புதிய குடியிருப்பிற்கு வர மறுத்துவிட்டனர், ஏனெனில் கப்பல்களில் பயன்படுத்தப்படும் உலோக கன்டெய்னரை பிரித்து உருவாக்கப்பட்ட அந்த வீடுகள் வெப்ப மிகுதியாக இருக்கும், அந்த கன்டெய்னரில் பல வசதிகள் இருந்தாலும் அது பார்ப்பதற்கு சிறை முகாம் போன்று இருக்கிறது எனக்கூறி வரமறுத்துவிட்டனர். சில அகதிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்புகளுக்கு சென்றுவிட்டனர்.

SHARE