வீட்டு வாசலில் மழை போல் குவிந்த பனி

284
பனி புயல் காரணமாக வீட்டு வாசலில் மலை போல் பனி குவிந்ததால் வெளியேற முடியாமல் தம்பதியினர் தவித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பல பகுதியிலும் கடந்த சில நாட்களாக கடும் பனிப்புயல் வீசியது.

இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிபோயினர். தற்போது அங்கு இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சம் சீரடைந்துவருகிறது.

இந்நிலையில் நியூஜெர்சி மாகாணத்தின் கெண்டல் பார்க் பகுதியில் வசித்து வரும் ஷான் யின் மற்றும் ஹெலென் லூ தம்பதியினர் பனிக்கு பயந்து தங்களின் வீட்டிலேயே முடங்கியிருந்துள்ளனர

பின்னர் கடந்த சனிக்கிழமையன்று வானிலை ஓரளவு சீரடைந்ததும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடிவு செய்து கதவை திறந்துள்ளனர்.

கடும் சிரமத்துக்கு பிறகு கதவை திறந்த அவர்கள் வீட்டின் வாசல் முழுவதும் பனியால் மூடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் வெளியேற முடியாமல் தவித்த அவர்கள் உடனடியாக வீட்டின் உரிமையாளருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அவரும் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். எனினும் வானிலை காரணமாக அடுத்த நாள் தான் மீட்புப்படையினர் அவர்களின் வீட்டை அடைந்தனர்.

பின்னர் ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக போராடி பனியை அப்புறப்படுத்தி தம்பதியினரை மீட்டனர்.

இது குறித்து ஷான் கூறுகையில், இந்த சம்பவத்தை நினைக்கும் போது வேடிக்கையாக இருந்தாலும் பனி எங்களை எங்கும் வெளியே செல்லமுடியாமல் தடுத்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.

SHARE