ஹரியானாவில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி ஒருவரை செவிலியர் கன்னத்தில் அறைந்ததில் அவர் கட்டிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

339
ஹரியானாவில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி ஒருவரை செவிலியர் கன்னத்தில் அறைந்ததில் அவர் கட்டிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் நீலம் (25) என்ற நிறைமாத கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டுள்ளார்.திங்கட்கிழமை காலையில் இருந்து அவருக்கு பிரசவ வலி இருந்துள்ளது.

இந்நிலையில் இரவு 9 மணிக்கு பணிக்கு வந்த செவிலியர் ஒருவர் நீலத்தை திட்டியதுடன் அவரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

அந்த செவிலியர் அறைந்த வேகத்தில் கீழே விழுந்த நீலம் தரையில் படுத்தபடியே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஆனால் அந்த குழந்தை இறந்தே பிறந்துள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் நீலமும் இறந்துள்ளார்.

இதையடுத்து நீலமின் உறவினர்கள் இறந்த குழந்தையை எடுத்து கொண்டு சென்று காவல் நிலையத்திற்கு முன்பு போராட்டம் நடத்தியதால் செவிலியர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீலமின் தாய் சரோஜ் ராணி கூறுகையில், அந்த செவிலியர் என் மகள் இருந்த வார்டுக்குள் நுழைந்ததில் இருந்து அவரை திட்டிக் கொண்டிருந்தார்.

குழந்தை பெற ஒரு டேபிள் ஒதுக்குமாறு பலமுறை கேட்டும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அந்த செவிலியர் என் மகளை அறைந்தார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நீலமின் மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

SHARE