இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியை இன்று!

501

 

இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமார021-600x4501-600x368னின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை இடம்பெறவுள்ளன. INDONESIA AUSTRALIA DRUG CRIMEசிட்னியின் பிரதேசத்திலுள்ள DaySpring தேவாலயத்தில் இறுதிக் கிரியைகளுக்கு உரிய ஆராதனைகள் முற்பகல் 11 மணியளவில் இடம்பெறுமென குடும்பத்தவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இங்கு மயூரனின் குடும்பத்தவர்களும், அவரது உற்ற நண்பரான ஓவியர் பென் கில்ற்றியும் உரையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்தி வெளியிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மயூரன், கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி இந்தோனேஷியாவின் நுசக்கம்பங்கன் தீவில் துப்பாக்கி வேட்டுக்களை நெஞ்சில் தாங்கி மரணத்தைத் தழுவினார்.

அவருடன் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட அன்ட்ரூ சானின் இறுதிக் கிரியைகள் நேற்று சிட்னியில் இடம்பெற்றன. உற்றார், உறவினர், நண்பர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சானுக்கு பிரியாவிடை அளித்தார்கள்.

மயூரன் தம்மை விட்டு நிரந்தரமாக பிரியாவிடை பெற்றுச் செல்லும் தருணத்தில், அவரது புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை பகிரங்கப்படுத்தியுள்ளனர். இதிலுள்ள படங்கள் மயூரனின் இளமை வாழ்க்கையையும், குத்துச் சண்டையில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும் புலப்படுத்தி நிற்கின்றன.

சொந்த நாட்டில் அடக்கம்

இந்தோனேஷிய அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்ட மயூரன் சுகுமாரன் மற்றும் ஆண்ட்ரூ சான் ஆகியோரின் உடல்கள் அவுஸ்திரேலியாவில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியிவில் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 2 நபர்கள் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 28ம் திகதி நள்ளிரவில் தண்டனையை இந்தோனேஷிய அரசு நிறைவேற்றியது.

தற்போது, அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த இருவரின் உடல்கள், இன்னும் இரண்டு நாட்களில் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கையில் என்னை நானே தடுத்துக்கொண்டது தான் என்னை தடுத்துவிட்டது, தினமும் சின்ன சின்ன இலக்குகளை வைத்துக்கொண்டு வெற்றி அடைய முயற்சி செய்யுங்கள்.

ஏனெனில் சின்ன சின்ன வெற்றிகள் சேர்ந்துதான் பெரிய வெற்றியாக அமையும்.

யாரையும் முடியாது என்று சொல்ல அனுமதிக்காதீர்கள், அவர்களுடைய எதிர்மறை எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாக மாற்றுங்கள் என்று தன் உறிவினருடன் இறுதியாக பேசியுள்ளார்.

mayuran_sukumarn_002

SHARE