100 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து சாவு – சாகச வீரருக்கு நேர்ந்த பரிதாபம்

298
பிரான்சின் பிரபல சாகச வீரர் ஒருவர் புதிய சாகசத்தின் போது 100 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்சின் பிரபல சாகச வீரரான Tencrede Melet துணிச்சல் மிகுந்த பல சாகசங்கள் புரிந்து சாதனை படைத்து அசத்தியவர்.

Tightrope walk எனப்படும் கயிறின் மேல் அந்தரத்தில் நடக்கும் சாகசத்தில் பெயர் பெற்ற இவர், புதிய சாகசமொன்றில் பங்கேற்று வந்துள்ளார்.

100 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் பலூன்களுக்கு நடுவே சாகசம் புரிய தயார் எடுத்துகொண்டிருந்த Melet தவறி விழுந்துள்ளார்.

32 வயதான சாகச வீரர் Melet தமது சாகச குழுவினருடன் இணைந்து இந்த பலூன் சாகசத்தை ஏற்பாடு செய்து அதற்கான தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

உலக அளவில் மிகவும் பிரபலமான குழுக்களில் ஒன்றான இவர்கள் இதுவரை உலகின் உயரமான அனைத்து மலைமுகடுகளிலும் Tightrope walk சாகசத்தை செய்து முடித்துள்ளனர்.

அவரது திடீர் மறைவில் அதிர்ச்சியடைந்துள்ள ரசிகர்கள் பேஸ்புக் பக்கத்தில் தங்கள் இரங்கல் செய்திகளை பதிவேற்றியுள்ளனர்.

SHARE