13வது சரத்தை முன்னெடுக்க இலங்கையுடன் இந்தியா பேசும்: பாரதீய ஜனதாக்கட்சி

478
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 13ஆம் சரத்து விடயத்தை செயற்படுத்த, இந்தியா முனையும் என்று பாரதீய ஜனதாக்கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இந்தநிலையில் 13வது சரத்தை அமுல்படுத்த அவரின் அரசாங்கம் முனையும் என்று கட்சியின் பேச்சாளர் நிர்மலா சித்தாரணம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் செய்தித்தாள் ஒன்றுடன் தொலைபேசியில் உரையாடிய நிர்மலா, இலங்கையுடன் அதிகாரப்பரவலாக்கம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலாசாரம் போன்றவை தொடர்பில் தமது அரசாங்கம், இலங்கையுடன் பேசும் என்று  குறிப்பிட்டார்.

மோடியின் பதவியேற்பின் போது இலங்கையின் ஜனாதிபதியை அழைப்பதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டமை குறித்து கருத்துரைத்துள்ள அவர், சார்க் நாடுகளின் தலைவர்களை பதவியேற்புக்கு அழைத்த முடிவு, உரியமுறையில் ஆராயப்பட்டே எடுக்கப்பட்டதாக நிர்மலா தெரிவித்துள்ளார்

 

SHARE