13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அஸ்கிரி பீடம்

500

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அஸ்கிரி பீடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடாது 13ம் திருத்தச் சட்டத்தை உடனடியாக அரசாங்கம் ரத்து செய்ய வேண்டுமென அஸ்கிரி பீடத்தின் சிரேஸ்ட உறுப்பினர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் இலங்கை எதிர்நோக்கி வரும் அழுத்தங்களுக்கு 13ம் திருத்தச் சட்டமே முக்கிய ஏதுவெனத் தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது னஎ அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாணசபை முறைமையினால் பணம் விரயமாவதனைத் தவிர வேறும் எந்த நன்மைகளும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா பரிந்துரை செய்யும் எல்லா காரியங்களையும் செய்ய வேண்டிய அவசியம் எமக்குக் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

7bb658fead4cea794c76f921dc5b6f1d-2wvjuyhi6pm1eh5uxbi6fe

SHARE