ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறும் பாரிய அணி- நிமல் சிறிபால டி சில்வா முக்கிய பங்கினை வகிக்கிறார்

442

 

061028geneva1  மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் தனது சர்வாதிகார ஆட்சிமுறையின் மூலம் தனது பரம்பரையான ஆட்சியை கொண்டுவர முடியும் என எண்ணியிருந்த தருணத்தில் மேலும் பல அமைச்சர்கள் அமைச்சுப் பதவிகளில் இருந்து வெளியேற தயாராகவிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் சிலரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

இதில் குறிப்பாக நிமல் சிறிபால டி சில்வா முக்கிய பங்கினை வகிக்கிறார். இப்பெயர்ப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டவர்கள் சந்திரிக்காவின் நம்பிக்கையாளர்களாக செயற்பட்டவர்கள். பண்டாரநாயக்க குடும்பத்தினை அரச பொறுப்புக்களிலிருந்து தூக்கியெறிந்த மஹிந்தவிற்கு அவருடை பதவியினை இழக்கச் செய்யும் அதிகாரத்தினை சந்திரிக்கா அவர்கள் தன் கைவசம் வைத்திருக்கின்றார் என்பதனை அறியமுடியாமல் போயுள்ளமை வருந்தத்தக்க விடயமாகும்.

சந்திரிக்காவினால் தான் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆட்சிக்கு வந்தார்; என்பதை மறந்து பண்டாரநாயக்க குடும்பத்தினரை தூக்கியெறிந்து சர்வாதிகாரத்தினால் ஆட்சியை நடாத்தி வந்ததன் விளைவாக இன்று மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெரும் இக்கட்டான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

images

14 மாவட்டங்களின் கட்சி தாவல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
பொலன்னறுவை மாவட்டம்
1. மைத்திரிபால சிறிசேன
2. சிறிபால கம்லத்
அநுராதபுரம் மாவட்டம்
3. துமிந்த திசாநாயக
குருநாகல் மாவட்டம்
4.எஸ்.பி.நாவின்ன
5. நில்வலா விஜேசிங்க
6. சாலிந்த திசாநாயக்க
7. நிரஞ்சன் விக்கிரமசிங்க
அம்பாறை மாவட்டம்
பைசல் காசிம்
எம்.எச்.எம்.ஹரீஸ்
பதுளை மாவட்டம்
10. ரோஹண புஷ்பகுமார
காலி மாவட்டம்
11. பியசேன கமகே
12. ரமேஷ் பத்திரன (முன்னாள் அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவின் புதல்வர்)
13. குணரத்தின வீரக்கோன்
கம்பஹா மாவட்டம்
14. சரத் குமார குணரத்ன
15. அத்துரலியே ரத்ன தேரர் (ஏற்கெனவே கட்சி தாவிவிட்டார்)
16. வசந்த சேனநாயக்க (ஏற்கெனவே கட்சி தாவிவிட்டார்)
களுத்துறை மாவட்டம்
17. ரெஜினோல்ட் குரே
18. ராஜித சேனாரத்தின
19. விதுர விக்கிரமநாயக்க
20. ரத்னசிறி விக்கிரமநாயக்க
கண்டி மாவட்டம்
21. ரவூப் ஹக்கீம்
மொனராகலை மாவட்டம்
22. சுமேதா ஜயசேன
மாத்தளை மாவட்டம்
23. ஜனக பண்டார தென்னகோன்
நுவரெலியா மாவட்டம்
24. நவீன் திசாநாயக்க
25. சீ.பி.ரத்நாயக்க
இரத்தினபுரி மாவட்டம்
26. சனீ ரோஹண வன்னி
27. ரிசாத் பதியுதீன்
கொழும்பு மாவட்டம்
28. பாட்டலி சம்பிக்க ரணவக்க (ஏற்கெனவே கட்சி தாவிவிட்டார்)
தேசியப்பட்டியல்
29. ஹசன் அலி
30. எம்.எஸ்.எம். அஸ்லம்
31. அசல சுரங்க ஜகொட
32. ரஜீவ விஜேசிங்க
இன்று மாலை கட்சி தாவும் மேலும் பலரின் பெயர்களும் வெளிவரும்.

SHARE