2016 தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

291

 

சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள், சதவீத விவரம் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்ற அதிமுக 40.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து, 89 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக 31.6 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. நோட்டா 1.3 சதவீத வாக்குகள் பெற்று பல சிறிய கட்சிகளை பின்னுக்கு தள்ளியுள்ளது. 

 கட்சிகள் வாக்கு சதவீதம்:- (அடைப்புக்குறிக்குள் இருப்பது வாக்குகள்)
அதிமுக 40.8 (1,76,17,060)
திமுக 31.6 (1,36,70,511)
காங்கிரஸ் 6.4 (27,74,075)
பாமக 5.3 (23,00,775)
பாஜக 2.8 (12,28,692)
தேமுதிக 2.4 (10,34,384)
நாம் தமிழர் கட்சி 1.1 (4,58,104)
மதிமுக 0.9 (3,73,713)
இந்திய கம்யூனிஸ்ட் 0.8 (3,40,290)
விடுதலை சிறுத்தைகள் கட்சி 0.8 (3,31,849)
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 0.7 (3,13,808)
மார்க்சிஸ்ட் 0.7 (3,07,303)
தமாகா 0.5 (2,30,711)
புதிய தமிழகம் 0.5 (2,19,830)
மனிதநேய மக்கள் கட்சி 0.5 (1,97,150)
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 0.4 (1,67,560)
பகுஜன் சமாஜ் 0.2 (97, 823)
எஸ்டிபிஐ 0.2 (65, 978)
நோட்டா 1.3 (5, 61,244)

குறிப்பு: இதில் கூட்டணி இல்லாதது தனித்து போட்டியிட்ட கட்சிகள் மூன்று. பிஜேபி, நாம்தமிழர் கட்சி, எஸ்.டி.பி.ஐ கட்சி. இவைகள்தான். மற்றைய கட்சிகளின் பெற்ற வாக்கு சதவீதம் அவர்களது சொந்த வாக்கு மட்டும் அல்ல. அவர்களது சொந்த வாக்கும் + கூட்டணி கட்சிகளின் வாக்குகளும் சார்ந்ததே இந்த சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முக்கிய விடயம் என்னவென்றால் மேலே சொன்ன 3 கட்சிகளில் நாம்தமிழர் கட்சி மற்றும் பிஜேபி 234 தொகுதிகளிலும் போட்டி இட்டன. ஆனால் எஸ்.டி.பி.ஐ கட்சி வெறும் 30 தொகுதிகளில் போட்டியிட்டு 0.2 எடுத்து இருப்பது பாராட்ட பட வேண்டிய விடயமே.

SHARE