இது இந்திய பண மதிப்பின்படி 42 கோடியே 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு சமம் ஆகும். இதில் சுமார் 30 கோடி ரூபாய் (50 லட்சம் டாலர்கள்) கருவூல நோட்டுகளாக உள்ளன.
ஒபாமாவுக்கும் அவரது மனைவி மிச்சேலுக்கும், கடந்த ஆண்டு ரூ.2 கோடியே 96 லட்சத்து 77 ஆயிரம் வருமானம் (5,03,183 டாலர்கள்) கிடைத்து உள்ளது. இது தவிர ஒபாமாவுக்கு அதிபர் பதவியின் மூலம் வருட வருமானமாக 2 கோடியே 36 ஆயிரம் சம்பளம் (4 லட்சம் டாலர்கள்) கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல் புத்தக ராயல்டி மூலம் அவருக்கு 2 கோடியே 84 ஆயிரத்து 38 ஆயிரம் ரூபாய் (4,82,000 டாலர்கள்) கிடைக்கிறது. சிகாகோவில் உள்ள தனது வீட்டை 5 கோடியே 90 லட்சத்துக்கு 30 ஆண்டுக்கு ஒபாமா அடமானம் (5 லட்சம் டாலர்கள்) வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடெனின் சொத்து மதிப்பு ரூ.5 கோடி (8,85,000 டாலர்கள்) ஆகும். அவருக்கு வருட சம்பளமாக 1 கோடியே 36 லட்சத்து 11 ஆயிரத்து 300 ரூபாய் (2,30,700 டாலர்கள்) கிடைக்கிறது.
அவருக்கு வாடகை மற்றும் புத்தக ராயல்டி மூலம் 61 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் (1,05,000 டாலர்கள்) வருமானம் கிடைக்கிறது. அவருக்கு 5 கோடியே 59 லட்சத்து ரூபாய் (5 லட்சம் டாலர்கள்) வீட்டுக்கடன் உள்ளது.