3 வது டெஸ்ட் போட்டி: அஸ்வின் -ஜடேஜா அசத்தல்!

293
அஸ்வின் – ஜடேஜா அசத்தல் பந்து வீச்சில் தென் ஆப்ரிக்க அணி 2 வது விக்கெட்டை இழந்து ஆடிவருகின்றது.

ஆட்டத்தின் துவக்கம் முதலே தடுமாற்றத்துடன் காணப்பட்ட இந்திய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதில் அதிகபட்சமாக முரளி விஜய் 40 ஓட்டங்களை எடுத்துள்ளார். ஜடேஜா (34), சாகா (32) ஓட்டங்களுடன் வெளியேறியுள்ளனர்.

தென் ஆப்ரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இந்திய அணி 215 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்துள்ளது.

தென் ஆப்ரிக்கா அணி சார்பாக மோர்க்கல் (3), ஹாமர் (4) விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர்.

இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 8 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது.

SHARE