332
இந்தியா- வங்கதேசம் இடையேயான எல்லைப் பகுதியை பிரித்துக் கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. முன்னதாக, கடந்த 1974-ம் ஆண்டு, இந்தியா வங்கதேசம் இடையே எல்லைப்பகுதியை பிரித்துக் கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், தற்போது வரை இந்தியாவிற்குட்பட்ட பகுதிகள் வங்கதேச நாட்டிற்குள்ளும், வங்கதசேத்திற்கு சொந்தமான நிலப்பகுதிகள் இந்தியாவிற்குள்ளும் உள்ளன. இவற்றை சீரமைத்து நிரந்தரமாக வரையறை செய்து எல்லைப்பகுதியை நிர்ணயிக்கும் நடைமுறை இதுவரை கையெழுத்தாகவில்லை.

எல்லையை சீரமைக்க இந்தியாவை வங்கதேசம் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தது. சில மாதங்களுக்கு முன் பிரதமர் நரேந்திரமோடி வங்கதேசம் சென்றிருந்தார். அப்போது எல்லை பிரச்னை குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் இன்று அதிகாரப்பூர்வமாக, துவங்குகிறது.

இந்த, ஒப்பந்தத்தின்படி இந்தியாவிற்குள் 51 பகுதிகளில் உள்ள 7,110 ஏக்கர் நிலப்பரப்பினை வங்கதேசத்திற்கும், வங்கதேசத்திற்குள் 111 பகுதிகளில் உள்ள 17,160 ஏக்கர் நிலப்பரப்பினை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வகையில் எல்லை வரையறை பரிமாறிக்கொள்ளப்படும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

4 தசாப்தங்களுக்குப் பிறகு எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதையொட்டி வங்கதேசத்தில் உள்ள குரிக்ராம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மாவட்டம் இந்தியாவுக்கு சொந்தமாக இருப்பது குறிப்பிடத்தக்கது

SHARE