35 ஐ.எஸ். தீவிரவாத நிலைகள் தரைமட்டம், அதிரடி தாக்குதல்.

302

கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. இதையடுத்து, ரஷியா, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை ஆகியவை சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

பாரீஸ் தாக்குதலுக்கு பிறகு பிரான்ஸ் ராணுவம் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை துரிதப்படுத்தியது. அமெரிக்க கூட்டு ராணுவப் படையினருடன் இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தி வந்த நிலையில், கடந்த 5 நாட்களில் மட்டும் பிரெஞ்சு போர்விமானங்கள் சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் 6 முக்கிய நிலைகளின் மீது 60-க்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியது. இவைகளில் பெரும்பாலானவை ஐ.எஸ். தீவிரவாதிகளின் கமாண்ட் சென்டர் மற்றும் பயிற்சிக் களங்களாகும்.

இதுவரை அங்கு 35-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாத நிலைகளை தவிடுபொடியாக்கி இருப்பதாக பிரான்ஸ் ராணுவ செய்தித்தொடர்பாளர் கெலனல்.கில்லிஸ் ஜாரோன் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் பிரான்ஸின் விமானப்படைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் ஆணு ஆயுத விமானங்களை தாங்கும் சார்லஸ் டி கவுலே போர்க்கப்பல் கிழக்கு மெடிடீரனீன் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளது.

SHARE