அகமதாபாத்தில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
முதலில் ஆடிய குஜராத் அணி 200 ஓட்டங்கள் குவித்தது. சாய் சுதர்சன் 84 (49) ஓட்டங்களும், ஷாரூக் கான் 58 (30) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய RCB அணியில் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் (Will Jacks) அதிரடியில் மிரட்டினார்.
கோலியும் மறுபுறம் அதகளம் செய்தார். இதன்மூலம் பெங்களூரு அணி 16 ஓவரிலேயே 206 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
விராட் கோலி 44 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்களும், வில் ஜேக்ஸ் 41 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்களும் விளாசினர்.