45 ஆண்டு கால சாதனை முறியடிப்பு: கங்குலியின் அழைப்பை ஏற்று இந்தியா வரும் வெயர்ன் ரூனி

330
இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் வெயர்ன் ரூனி இந்தியா வரவிருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.கால்பந்து ஜாம்பவான் பிலே அத்லெடிகோ டி கொல்கத்தா அணி விளையாடும் கால்பந்து போட்டியை காண இந்தியா செல்கிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அத்லெடிகோ டி கொல்கத்தா அணியின் உரிமையாளரான சவுரவ் கங்குலி, “தற்போது மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் ரூனி இந்தியா வருவது உறுதிதான்.

அவர் நவம்பர் மாதத்தில் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் கொல்கத்தா வருகிறார். கொல்கத்தாவில் 2 அல்லது 3 நாட்கள் இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் 15வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், சுவிஸ் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணித்தலைவர் ரூனி 50வது சர்வதேச கோலை அடித்தார்.

இதன் மூலம் இங்கிலாந்து வீரர்களில் அதிக கோல் அடித்தவரான பாபி சார்ல்டனின் (49 கோல்) 45 ஆண்டு கால சாதனையை ரூனி முறியடித்தார்.

SHARE