496 ஓட்டங்கள் குவித்து சங்கக்கார முதலிடம்

384
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் கடந்த மாதம் 14ம் திகதி தொடங்கிய உலகக்கிண்ண லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தது.

இதில் இலங்கையின் விக்கெட் கீப்பர் சங்கக்காரா, அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் 6 போட்டிகளில் விளையாடி 496 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்கள் அடங்கும்.

இவருக்கு அடுத்தப்படியாக ஜிம்பாப்வே வீரர் பிரண்டன் டெய்லர் 433 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் இரண்டு சதம் மற்றும் ஒருஅரை சதம் அடங்கும். 3வது இடத்தில் டிவில்லியர்ஸ் ஒரு சதம், இரண்டு அரை சதத்துடன் 417 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

இலங்கை வீரர் டில்ஷான் 395 ஓட்டங்களுடன் 4வது இடத்திலும், வங்கதேச வீரர் மெக்முதுல்லா 344 ஓட்டங்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

ஜிம்பாப்வே வீரர் வில்லியம்ஸ் 339 ஓட்டங்களுடன் 6வது இடத்திலும், இந்திய வீரர் தவான் 337 ஓட்டங்களுடன் 7வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் மிஸ்பா- உல்- ஹக் 316 ஓட்டங்களுடன் 8வது இடத்திலும் இருக்கின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் அன்வர் (311 ஓட்டங்கள்), தென் ஆப்பிரிக்கா வீரர் அம்லா (307 ஓட்டங்கள் ) முறையே 9 மற்றும் 10வது இடத்தில் உள்ளனர்.

SHARE