எபோலா வைரஸ் தாக்கத்தினைத் தொடர்ந்து உலகில் வேகமாகப் பரவிவரும் நோயாக இனங்காணப்பட்டிருக்கும் ஜிக்கா வைரஸ்

324

ஜிக்கா வைரஸ் முதன்முதலில் 1947ஆம் ஆண்டு உகண்டாவில் உள்ள ஜிக்கா என்ற காட்டில் கண்டறியப்பட்டது. அதனால், இதற்கு இப்பெயர் வந்தது.

ஆபிரிக்காவிலும், ஆசியக் கண்டத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இதன் பாதிப்பு இருந்து வந்தது. 2007ம் ஆண்டு மேற்கு பசுபிக் பெருங்கடலில் அருகில் உள்ள யாப் என்ற தீவில் வசித்த 75 சதவீதம் பேரை இந்த வைரஸ் தாக்கியது. அதன்பிறகு, 2015ம் ஆண்டு மே மாதம் பிரேசிலில் இந்த வைரஸ் தாக்கியதை பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளை தாக்கும் இந்த கொடிய வைரஸ் நோய் 25 நாடுகளில் பரவி இருப்பதாலும், டெங்குவை பரப்பும் ஏடிஸ் வகை கொசு மூலமே ஜிக்கா கிருமிகளும் பரவுகிறது என்பதாலும் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எனினும் 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது.

இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தையின் தலை சிறியதாக காணப்படும் என்றும் மரபணு மற்றும் நரம்பியல் உள்ளிட்ட நோய்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு உருவாகும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் ஜிக்கா வைரஸ் உடலுறவு மூலமும் பரவுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனாலேயே ஜிக்கா வைரஸ் தாக்கம் உள்ளதெனக் கண்டறியப்பட்ட நாடுகளிலுள்ளவர்கள் உடலுறவு கொள்வதைத் தவிர்க்குமாறும், பெண்களை கருத்தரிக்கவேண்டாம் எனவும்  கேட்டுக்கொண்டுள்ளனர்.

x_30_nn_zikavirus_200116_001.nbcnews-ux-1080-600

28-1453974724-20-1440053368-sex56-600

zika-worldmap

SHARE