கல்முனையில் ஒரு இளம்பெண் கழுத்துவெட்டப்பட்டுக்கொலை

373

 

. கல்முனையில் ஒரு இளம்பெண் கழுத்துவெட்டப்பட்டுக்கொலை செய்யப்பட்டதுதான் அந்த செய்தி.நீண்டநாட்களுக்குப்பிறகு இச்செய்தி கிடைத்தமை சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் உண்மையாக என்ன நடந்தது? என்பதையறிய பலரும் உசாரானார்கள்.

மறு கணம் நானும் கல்முனைக்கு விரைந்தபோது அங்கு கோயில் திருவிழாவொன்றில் எப்படி மக்கள் கூட்டம் நிற்குமோ அப்படி சனம் திரண்டு நின்றது. போக்குவரத்துப்பொலிசார் சனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடினர். சம்பவம் இடம்பெற்ற இடம் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள மிகவும் சனசந்தடிமிக்க பசாரில் உள்ளது.

அங்குள்ள இந்நிதிநிறுவன அலுவலகத்தில் இச்சம்பவம் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளமை பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.
கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி என்ற காரணத்தினால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம். எனவே அவற்றை வேறு தற்காலிக பாதையால் திசைதிருப்பிக்கொண்டிருந்தனர் பொலிசார்.

நீண்டநாட்களுக்குப்பிறகு கல்முனையெங்கும் ஒரேபரபரப்பு. பதட்டம்.அனைவர் முகத்திலும் திகில் பீதி. வீதியால் வருவோர் போவோர் எல்லாம் என்ன நடந்தது? என்ற கேள்வியைத்தான் கேட்டனர்.ஆனால் யாருக்கும் சரியான தகவலைச் சொல்லமுடியவில்லை.
சம்பவம்!

சம்பவம் என்னவென்றால் கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் இளம் பெண்முகாமையாளர் கழுத்து வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.  அவரது சடலம் மாபிள் நிலத்தில் இரத்தவெள்ளத்தில் குப்புறக்கிடந்தது.

கல்முனையையடுத்துள்ள நற்பிட்டிமுனை குளோரி வீதியைச் சேர்ந்த திருமதி திலீபன்; சுலக்ஷனா (வயது 33) என்ற இளம் பெண் இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அவர் திருமணம் முடித்தவர். மூன்றாம்வகுப்பில் படிக்கும் 8வயது பெண் பிள்ளையின்தாய். கணவர் தையல்வேலை செய்பவர்.
மட்டக்களப்பு சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தில் உதவி முகாமையாளராகப்பணியாற்றிய இவர் பதவியுயர்வு பெற்று கல்முனைக்கிளைக்கு முகாமையாளராக பதவியேற்று ஆக இருவாரங்களே ஆகின்றன.

இவரது இடத்திற்கு கல்முனை முகாமையாளராகவிருந்த பொன்னம்பலம் உதயகுமார் என்பவர் இடமாற்றப்பட்டிருந்தார்.
சர்வோதயம் என்பது உலகறிந்த நாமம். கலாநிதி ஏ.ரி.ஆரியரத்னாவின் சேவையின் அடையாளமாக மிளிர்ந்த சர்வோதயத்தின் புதிய ஒரு நிதி நிறுவனமாக சுமார் ஆறுவருடங்களுக்குமுன் தேசோதய அபிவிருத்தி நிதிக்கம்பனி(DFCC) உருவாக்கப்பட்டது.

சர்வோதய அமைப்பின் ஒரு துணை நிறுவனமாக உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தின் பெயரை கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சர்வோதயத்தில் சாதாரண உறுப்பினராக இணைந்து சுமார் 15வருடங்கள் சேவையாற்றிய உதயகுமார் படிப்படியாக உயர்ந்து முகாமையாளராக பதவியுயர்வுபெற்றவர்.சாந்தமான குணம் படைத்தவராவார்.சண்டைசச்சரவிற்கு செல்லாதவர் எனக்கூறபப்டுகிறது.

அவரே கொலையுண்ட தனது நெருங்கிய உறவினரான சுலக்சனாவை சர்வோதயத்தில் இணைத்தவர். சுலக்சனாவும் சுமார் 6வருடங்கள் பணியாற்றி மட்டக்களப்பில் உதவிமுகாமையாளராக பதவியுயர்வுபெற்று இருவாரங்களுக்கு முன்பு கல்முனைக்கு முகாமையாளராக நியமனம் செய்யப்பட்டார்.

ஒரே பரபரப்பு!

இது இவ்வாறிருக்க இக்கொலையையார் செய்தார்? என்பது தொடர்பில் அக்கணம் யாருக்கும் தெரியாது. ஆனால் பலதரப்பட்ட வதந்திகள் கைகால்வைத்து சிறகடித்துப்பறந்தன. எதை நம்புவது எதனை நம்பாமல் விடுவது என்று தெரியாமல் ஒரே பரபரப்பு மக்களுக்கு.

வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் வீதியிலும் அருகிலிருக்கக்கூடிய கட்டடங்களிலும் ஏறிநின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். கொலையாளியை நாம் அடித்துக்கொல்வோம் என்ற வண்ணம் பொலிசாருக்கே அச்சுறுத்தலாக இளைஞர்கூட்டம் சில.மொத்தத்தில் களேபரம் உருவாகக்கூடிய நிலைமைதான் அங்கு காணப்பட்டது.

அங்கு வந்த பொலிஸ் பொறுப்பதிகாரி கபார் அங்குநின்ற சமுகசேவையாளர் ராஜனை அழைத்து நாம் விசாரணைசெய்து கொலையாளியைக்கண்டுபிடிப்போம். எனவே மக்களை தயவுசெய்து பொறுமைகாத்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய முக்கியசெய்தி என்னவென்றால் வெளியில் நின்ற கூட்டத்தில் கொலைச்சந்தேகநபரும் சாரனுடன் நின்றிருக்கிறார் என்பதே.
இத்தனைக்கும் அந்த நிதிநிறுவனக்கட்டடம் மூடிக்காணப்பட்டது. உள்ளே என்ன நடக்கிறதென்பது வெளியே நின்றவர்களுக்குத்தெரியாது.
கர்ப்பிணியா?

கொலைசெய்யப்பட்டபெண்முகாமையாளர்கர்ப்பிணிஎனதகவல்கள்வெளியாகியபோதிலும்அதுஊர்ஜிதம்செய்யப்படவில்லை. அப்படி கர்ப்பிணியாயின் இது இரட்டைக்கொலையாக மாறலாம். இவர்கடமைக்குச்சென்றதும்வீட்டிலிருந்துபகல்உணவுஅனுப்பப்படுவதேவழக்கமாகஇருந்துவந்துள்ளது. சம்பவதினம், மதியச்சாப்பாட்டுக்குவீட்டுக்கு வருவதாகதனதுதாயாரிடம்கூறிவிட்டே சுலக்ஷனா சென்றுள்ளார்.

வீட்டிலிருந்து அன்றைய தினம் அலுவலகம் புறப்படுவதற்கு சற்று முன்னர தாயாரை அழைத்த சுலக்ஷனா, ‘பிள்ளைக்குச்சாப்பாடுகொடுங்கள். நான்சாப்பாட்டுக்குவருகிறேன்’என கூறி விட்டே அலுவலகம் புறப்பட்டுள்ளாரென குடும்பஉறவினர்கள்தெரிவித்தனர்.

உள்ளே என்ன நடந்தது?

இச்செய்தியறிந்ததும் கல்முனை பொலிஸ் நிலைய தலைமையகப் பொறுப்பதிகாரி எ.டபிள்யு .அப்துல் கபார் தலைமையிலான குழுவினர் 3மணியளவில் ஸ்தலத்திற்கு விரைந்தனர். உள்ளே சென்று சடலத்தை பார்த்துவிட்டு வெளியேவந்து நீதிபதியின் வருகைக்காக வெளியே காத்துக் கொண்டிருந்தனர்.

இதற்கு மேலதிகமாக உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் திரு ஹேமந்தவும் சென்றிருந்தார். செய்தி தெரிவிக்கப்பட்டதும் கல்முனை மாவட்ட நீதிபதி திரு.இராமகமலன் அவர்களும் வருகை தந்திருந்தார்கள்.

அறிவித்தல் கொடுத்ததற்கிணங்க அம்பாறையிலிருந்த விசேடமாக வரவழைக்கப்பட்ட சொக்கோ புலனாய்வு சோதனைப்பிரிவினரும் மோப்பநாய்களுடன் வந்திருந்தனர்.

இவர்கள் அனைவரும் சுமார் 4மணியளவில் உள்ளே சென்றனர். சடலத்தை நீதிபதி பார்வையிட்டபின்னர் வெளியே நின்றிருந்த கொலையுண்டவருடன் பணியாற்றும் ஏனைய ஊழியர்களை ஒவ்வொருவராக உள்ளே அழைத்து விசாரித்த வண்ணமிருந்தனர்.

மூடிய அலுவலகத்தினுள் இவ்வசாரணை மனித்தியாலக்கணக்கில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.சுமார் ஆறுபேர் இவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். கொலையுண்டவருடன் வேலைசெய்யும் இரு பெண்களும் நான்கு ஆண்களும் இவ்விதம் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.
சிவப்புநிறத் தலைக்கவசம்!

அப்போது அங்கிருந்த சிவப்புநிறத் தலைக்கவசம் பொலிசாரின் கவனத்தை திருப்பியது. இது யாருடையது? என பொலிசார் வினாவ இது முன்னாள் முகாமையாளர் உதயகுமாரினுடையது என விசாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த ஒரு ஊழியரால் பதிலளிக்கப்பட்டது. அவர் வெளியே நிற்பதாகவும் கூறப்பட்டது. அவரை உள்ளே வருமாறு பொலிசார் அழைக்க அவரும் உள்ளே வந்தார்.

இத்தலைக்கவசம் எம்முடையதா? என பொலிசார் கேட்க ஆம் என்னுடையதுதான் என உதயகுமார் பதிலளித்தார். நீர் எதற்காக இங்கு வந்தீர்? என மீண்டும் கேட்டதற்கு இப்படியொரு சம்பவம் இடம்பெற்றதாக அறிந்து வந்தேன்.நான் ஏலவே முகாமையாளராகக்கடமையாற்றிய நிறுவனம் என்பதால் அதனைப்பார்க்கவந்தேன் என்றார்.

பொலிஸ் பொறுப்பதிகாரி கபார் புத்திசாதுரியமாக கேள்விகளை அடுக்கிக்கொண்டு போகிறார்.விசாரணை முடிகிறது.
சரி கையொப்பத்தை இட்டுவிட்டு போகலாம் என்றார் பொலிஸ் பொறுப்பதிகாரி கபார்.

அவரும் ஒப்பத்தையிட்டுவிட்டு செல்லமுயற்சித்தவேளை அருகிலிருந்த பொலிஸார் இவரது கையில் இரத்தக்கறை இருப்பதைக்கண்டு கபாரிடம் சொன்னார்.
சற்றுப் பொறுங்கள்! இவ் இரத்தக்கறை எப்படி வந்தது? எனக் கேட்டார்.

அதற்கு அவர் நான் வீட்டில் இன்று ஓடாவி வேலை செய்தேன்.ஆணி அடிக்கும் போது கையில்பட்டுவிட்டது.அதனால் காயம் ஏற்பட்டது என்றார். மறுகணம் அவரது கையை பிடித்துப்பார்க்க கபார் முயற்சித்தபோது அவரது கையில் நடுக்கம் ஏற்பட்டதை கபார் இலகுவாக அனுபவத்தின்வாயிலாக அறிந்துகொண்டார். அதனால் அவருக்கு சிறு சந்தேகம் ஏற்பட்டது.

அவரை அங்கேயே வைத்து வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவரது மனவியிடம் இன்று வீட்டில் ஓடாவிவேலைகள் இடம்பெற்றதா? என வினவியபோது அப்படியொன்றும் நடக்கவில்லை என அவர் பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் வலுவுற்றது.

சடலத்தின் வாயில் நகம்!
கையை மீண்டும் தூக்கிப்பார்த்த கபாருக்கு அவரதுவிரலிலிருந்த நகத்தைக்காணாதது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அவர் உடனே பின்னால் அடுத்தஅறையில் குப்புறக்கிடந்த சடலத்தை நிமிர்த்தி வாயைப்பார்த்ததும் தூக்கிவாரிப்போட்டது. அதாவது சடலத்தின் வாயில் நகம் இருந்தது.

அங்கு சொக்கோ பிரிவினர் சடலத்தை முற்றாக சோதனைசெய்திருந்தனர்.அவர்களும் வாயில் நகமிருந்ததை குறித்துள்ளனர்.
மறுகணம் நீதிபதியிடம் விடயத்தைக்கூற கொலையாளி அவர்தான் என்பது ஊர்ஜிதமாயிற்று.

எனினும் சட்டபூர்வமாக நிருபிக்கப்படும்வரை அவர் சந்தேகநபர்தான் எனக்கருதி கைரேகை சகலவற்றையும் எடுத்துவிட்டு கைதுசெய்யவேண்டிய நிலையிருந்தது.அப்போது நேரம் மாலை 6.30மணியிருக்கும்.

பொறுப்பதிகாரி கபார் மின்னல்வேகத்தில் சிந்தித்து அவருக்கு அவ்விடத்திலே விலங்கிடாமல் மற்றுமொரு பொலிஸ்காரரை அழைத்து எந்தசந்தேகமும்வராதபடி இலகுவாக கதைத்தவண்ணம் இவரைக்கொண்டுசென்று ஜீப்பில் ஏற்றவேண்டும் எனக்கூறி அவர் முன்னே வெளியேறிச்செல்ல பின்னே உதயகுமார் செல்ல அதன்பின் மற்றுமிரு பொலிசார் செல்ல அவர் பொலிஸ் நிலையத்திற்குகொண்டுசெல்லப்பட்டார்.

வெளியே யாருக்கும் சந்தேகம்வராவண்ணம் கூட்டிக்கொண்பொலிஸ்நிலையத்திற்கு கொண்டுசென்றமை புத்திசாதூரியமான விடயமாப்பட்டது.
சிலவேளை இவர்தான் கொலையாளி என்பதை கைவிலங்குமூலம் மக்கள் அறிந்திருந்தால் பொதுமக்களால் அவ்விடத்தில் பெரும் களேபரம் உருவாகவாய்ப்பிருந்தது. அதனை கபார் புத்திசாதூரியமாகத் தவிர்த்திருந்தார் என்றுதான் சொல்லவேண்டும்.
கொலைச்சந்தே நபரை அனுப்பியகையோடு 7மணியளவில் சடலத்தை பொலித்தீனால் சுற்றிஅம்பாறைக்கு கொண்டு செல்ல பணித்துவிட்டு நீதிவானும் பொலிசாரும் வெளியேவந்தனர்.

அங்கு சந்தேகநபரின் மோட்டார்சைக்கிள் வைக்கப்பட்டிருந்தது. அதிலும் இரத்தக்கறை இருந்திருக்கிறது. பொலிசார் அதனையும் கைப்பற்றி பொலிஸ்நிலையத்திற்குக் கொண்டுசென்றனர்.

அதன்பின்னரே அங்கு திரண்டிருந்த மக்கள்கூட்டம் கலைந்தது.

பொலிஸ் அதிகாரி கபார் கருத்து!
அங்கு வெளியே கருத்துத்தெரிவித்த கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.டபிள்யு.அப்துல்கபார்:
சந்தேகநபரான பொன்னம்பலம் உதயகுமார் என்பவர் அதே நிறுவனத்தில் ஏலவே முகாமையாளராகக்கடமையாற்றி கடந்த மாதம் மட்டக்களப்பு கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டவராவார் .

கொலைசெய்யப்பட்டவரும் கொலைச்சந்தேக நபரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்தவர்களாவர். உறவினர்கள்.முன்னாள் முகாமையாளரின் இடமாற்றம் மற்றும் நிதிமோசடி தொடர்பான பிரச்சினையே இக்கொலைக்கு காரணமாயிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.
தான் இச்சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் மனஉழைச்சலுக்குள்ளானதாகவும் அதனாலேயே இக்கொலையைச்செய்ய நேர்ந்ததாக கொலையாளி ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்:
வழமை போன்று சனிக்கிழமை காரியாலயத்துக்கு சென்று கடமையாற்றிக் கொண்டிருக்கும் போதே இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது.
ஏனைய ஊழியர்கள் மதியஉணவிற்காக வெளியே சென்றநேரம் பார்த்து கொலைச்சந்தேகநபர் ஒன்றரை மணியளவில் உள்ளேவந்து இரண்டேகால் வரை இந்நாடகத்தை நடாத்தியிருக்கிறார் எனத்தெரிகிறது.

சுமார் 45நிமிடங்கள் அங்கு யாரும் வரவில்லையா? என்ற சந்தேகமும் உள்ளது. அங்கு காவலாளி இல்லை. சீசீரிவி கமரா இல்லை.’யாருமில்லை வரலாம் ‘என்ற செய்தியை யாரும் சொல்லியிருக்கக்கூடும் என்ற சந்தேகமும் பொலிசாரிடம் உள்ளது. இவர்களது தொலைபேசி அழைப்புகளை சோதனைசெய்கின்றபோது மேலும் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புண்டு.

அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் காப்புகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக முன்னர் கருதப்பட்டபோதிலும் பின்னர் அவை கொலையுண்ட இடத்திலேயே கிடந்தது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அலுவலக அலுமாரிக்குள் 10லட்சருபாவுக்கும் அதிகமான பணமிருந்துள்ளது. எனவே கொலையாளிக்கு கொள்ளையிடும் நோக்கம் சற்றேனும் இருக்கவில்லை

என்பது புலனாகிறது.
45நிமிடநேரத்துள் கொலையாளி இப்பெண்ணுடன் வாக்குவாதப்பட்டு அது முற்றியதும் கொலைசெய்ய முனைந்திருக்கலாம்.அப்போது
கொலைச்சம்பவம்நடைபெற்றபோதுஅப்பெண்கொலையாளியின்பிடியிலிருந்துதப்பித்துக்கொள்ளமுயற்சிசெய்தபோதுவிரல்கடிக்கப்பட்டுநகம்வாயினுள்சென்றிருக்கலாமெனபொலிசார்சந்தேகிக்கின்றனர்.

இந்தகொலைநடைபெற்றநேரமும் இடமும்கொலையாளிக்கு ஒருகொலைசெய்யக்கூடியவாய்ப்பு குறைவாகஇருந்தபோதும்நன்கு திட்டமிடப்பட்டு செய்யப்பட்டகொலையாகவேபார்க்கமுடிகின்றது.

நிறுவனத்தில்யாரும்இருக்கவில்லை. காவலாளிஇல்லை, சீசீரிவீகமராஇல்லை. இத்தனைவிடயங்களும் ஒரேநேரத்தில்அறிந்திருக்கக்கூடியமையானதுஅந்தநிறுவனத்தில்பணிபுரிந்தஅல்லதுஅந்தநிறுவனத்தைப்பற்றி நன்குஅறிந்தவரால் மட்டுமே தீர்மானித்திருக்கமுடியும்.

இந்தநிறுவனத்தில்இடம்பெற்றுள்ளநிதிமோசடிகள்அம்பலப்படுத்தப்பட்டிருப்பதால்ஏற்பட்டமுரண்பாடேஇந்தக்கொலைக்கானகாரணமெனதெரியவருகிறது. இதுகுடும்பதகராறாக இருக்கலாம் என்று பலரால் ஊகம் தெரிவிக்கப் பட்டாலும் கொல்லப்பட்ட புதிய முகாமையாளரின் வருகையின் பின்னர் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள பல மோசடி சம்பவங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன.

சில தகவலின்படி நிதிமோசடி சுமார் 1கோடி 80லட்சத்தையும் தாண்டியிருக்கலாமென கூறப்பட்டுள்ளது. அதனை விசாரணையின் பின்னரே கூறமுடியும். தற்போதைக்கு நிதிமோசடி பற்றிக்கூறமுடியாது.

எனவே இவற்றைத்தாங்க முடியாதநிலையில் இக்கொலைக்கானதிட்டம்வகுக்கப்பட்டிருக்கலாமெனபொலிசார்சந்தேகிக்கஇடமுண்டு.
கபாருக்கு திறமைக்கு பாராட்டு!

நாட்டில்பலவருடங்கள்கடந்தும்கண்டுபிடிக்கமுடியாமல்உள்ளசூழலில்இந்தக்கொலைச்சம்பவம்இடம்பெற்று 5.00 மணித்தியாலத்தில் சம்பந்தப்பட்டவர்கைதுசெய்யப்பட்டமையானதுகல்முனைபொலிஸ்நிலையப்பொறுப்பதிகாரிஏ. டபிள்யூ. ஏ. கப்பாரின்திறமையை வெளிப்படுத்தியுள்ளது.
இவர் ஏலவே சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக சிறப்பான பணியாற்றியிருந்தவர் என்பதனை இவ்வண் குறிப்பிடலாம்.

பாரியவன்முறைசம்பவம்ஒன்றுஅப்பிரதேசத்தில்நடப்பதற்கானசூழல்அமைந்திருந்தபோதும், எந்தவொருஅசம்பாவிதமும் நடைபெறாமல் மிகசூட்சுமமாக கொலையாளி கைது செய்யப்பட்டமைக்கு கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் சாமர்த்தியமான நடவடிக்கையே காரணமாகும்.

அதற்காகத்தான் என்னவோ திங்களன்று கல்முனை மாநகரசபைஅமர்வு இடம்பெற்றவேளை கபாருக்கு அங்குள்ள உறுப்பினர்கள் பாராட்டுத்தெரிவித்து உரையாற்றினர்.

செவ்வாயன்று அடக்கம்!
கொலையுண்ட பெண்முகாமையாளர் திருமதி திலீபன் சுலக்சனாவின் சடலம் திங்களன்று மாலை உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இரண்டுநாட்கள் வைத்தியசாலை செயற்பாடுகளின் பின்னர் திங்களன்று மாலை 8மணியளவில் சடலம் உறவினரிடம் கையளிக்கப்பட்டது.

சடலம் செவ்வாய்க்கிழமை நற்பிட்டிமுனையிலுள்ள அன்னாரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. பெருந்திரளான பொதுமக்கள் மரணவீட்டிற்கு சென்று தமது அனுதாபங்களைத் தெரிவித்திருந்தனர்.அன்றுமாலை நற்பிட்டிமுனை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கொலைச்சந்தேக நபருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக்கூடாது என்று கோரி மாதர் அமைப்புகள் ஒரு போராட்டத்தை நடாத்ததிட்டமிடுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

14 நாள் விளக்கமறியல்!

இதேவேளை கொலைச்சந்தேக நபரான முன்னாள முகாமையாளர் பொன்னம்பலம் உதயகுமாருக்கு 14நாள் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனைப்பொலிசார் திங்களன்று மாலை 5மணியளவில் கல்முனை மாவட்டநீதிபதியும் பதில்நீதிவான் நீதிமன்ற நீதிபதியுமாகிய இராமகமலன் முன் சந்தேகநபரை ஆஜர்ப்படுத்தினர். அவர் குற்றத்தைஒப்புக்கொண்ட கொலைச்சந்தேகநபரை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

தனக்கேற்பட்ட அவமானம் மனஉழைச்சல் விரக்தி காரணமாகவே இக்குற்றத்தை செய்ததாக பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் தெரிகிறது.
இதே வேளை கல்முனைப் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி எ.டபிள்யு.அப்துல்கபார் தகவல் தருகையில்

இக் கொலைச்சம்பவம் தொடர்பில் நாம் மேலும் பல தகவல்களைப் பெற்றுவருகின்றோம்.விசாரணை மிகவும் ஜருராக நடைபெற்றுவருகிறது. வங்கியில் நிதிமோசடி இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்றுவருகிறது என்றார்.

– See more at: http://seithyulagam.com/fullview-post-4919-cat-21.html#sthash.o3gfYbIm.dpuf

SHARE