468
இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியும், வெளிநாடுகளில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக அடைக்கலம் கேட்டு செல்லுகிற நிலைதான் உள்ளது. அப்படி அடைக்கலம் கேட்டு, புதுச்சேரியில் இருந்து 152 இலங்கைத் தமிழர்கள் ஒரு படகில் ஆஸ்திரேலியா நோக்கி கடந்த 13-ந் தேதி புறப்பட்டனர். அவர்களின் படகு, ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 300 கி.மீ. தொலைவில், நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது படகில் திடீர் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் படகு தத்தளித்தது. படகில் பயணம் செய்கிறவர்கள் உதவி கேட்டு தவிக்கின்றனர்.

இது குறித்து அந்த படகில் பயணம் செய்யும் டியூக் என்பவர், “படகில் 32 பெண்கள், 37 குழந்தைகள் என மொத்தம் 152 பேர் உள்ளோம். நாங்கள் அகதிகள். இலங்கையில் இருந்து வருகிறோம். இந்தியாவில் வாழ முடியவில்லை. எனவேதான் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் ஆனோம். எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் படகு சிக்கலில் அகப்பட்டுள்ளது. எங்களுக்கு உதவி வேண்டும்” என கூறினார். இந்த தகவலை ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

SHARE