வாகரையில் (முஸ்லீம்) குடியேற்றம்- ஹிஸ்புல்லா துரித நடவடிக்கை

278

 

14543557_1785183488417669_138934220_nமட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட எலவட்டமடு, மாங்கேணி தெற்கு, மேவாண்டகுளம், பணிச்சங்கேணி புதிய நகரம் ஆகிய பிரதேசங்களில் முஸ்லீம் மக்களை உடனடியாக குடியேற்றுவதற்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் துரித நடவடிக்கை எடுத்துள்ளார்.

வாகரை பிரதேசத்தில் முஸ்லீம்களை குடியேற்றுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசு உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை மாலை வாகரை பிரதேச செயலகத்துக்கு விஜயம் செய்திருந்தனர்.

அங்கு பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ரகுலநாயகி தலைமையிலான அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதற்குத் தேவையான நிதியினை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்குவதற்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

இராஜாங்க அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் 17ஆம் திகதி காணி ஏலம் நடத்தப்பட்டு மீள்குடியேற்றப்பாடத மக்களுக்கு காணிகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதுடன், குடியேற்றபடவுள்ள மேலதிக மக்களும் இணங்கானப்படவுள்ளனர்.

அதனை அடுத்து எலவட்டமடு, மாங்கேணி தெற்கு, மேவாண்டகுளம், பணிச்சங்கேணி புதிய நகரம் ஆகிய நான்கு பகுதிகள் மீள்குடியேற்றுவதற்காக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள 47 குடும்பங்களுடன் எதிர்வரும் 17ஆம் திகதி தெரிவு செய்யப்படும் குடும்பங்களும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் தற்காலிகமாக மீள்குடியேற்றப்படவுள்ளனர். பின்னர், அடுத்த வருட ஆரம்பத்தில் நிரந்தரமாக மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சரின் பணிப்புரைக்கமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

தற்காலிகமாக மீள்குடியேற்றப்படவுள்ள குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாவுடன், கழிப்பறை வசதிகளை செய்து கொள்வதற்காக 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிளவு வீடுகள் கட்டுவதற்கான தேவைப்பாடு இல்லாத காரணத்தினால், ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை திருத்துவதற்கு அமைச்சினால் நடவடிக்கை எடுப்பதாகவும், வீடுகளின் சேதத்தின் தரத்துக்கு ஏற்ப ஒரு குடும்பத்துக்கு 2 தொடக்கம் 3 இலட்சம் ரூபா வரை திருத்த வேலைகளுக்காக நிதி ஒதுக்குவதாகவும் வாக்குறுதி வழங்கினார்.14550879_1785183415084343_1166230012_o14543557_1785183488417669_138934220_n14568945_1785183481751003_1978676833_n14580398_1785183511751000_118918045_n

SHARE