பொட்டு அம்மான் கைது தொடர்பில் தினப்புயல் ஊடகம் வெளியீட்டுள்ள செய்தி

485

TamilNet PottuGoesSouth

புலிகளின் உளவுத்துறை பிரிவின் பொறுப்பாளர் பொட்டு அம்மான், ஹாங்காங்க நாட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும். அவரை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. பிரான்ஸ் நாட்டில் இருந்து இயங்கும் lankann.com என்னும் இணையம் சம்பவ தினத்திற்கு முன்னதாக ஊடறுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில் ஒரு லிங் காணப்பட்டதாகவும், அதனை ஓபன் செய்ய ஆரம்பித்தவேளை, உடனே தனது கம்பியூட்டர் நின்றுவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். பின்னர் கம்பியூட்டர் ரீ ஸ்டார்ட் செய்ய முற்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். இந்த இணையத்தை ஊடறுத்த சிலர் இச் செய்தியை அந்த இணையத்தில் முதலில் பிரசுரித்துள்ளார்கள்.

ஆனால் இச்செய்தி ஊடறுப்பாளர்களால் பிரசுரிக்கப்பட்ட மறுகணமே, இந்தியாவில் இருந்து இயங்கும் பிரபல்யமான தமிழ் இணையம் ஒன்று இச்செய்தியை lankann.com வெளியிட்டுள்ளதாக ஆதாரம் காட்டி வெளியிட்டு விட்டது. இதன் காரணமாகவே இச் செய்தி சில மணி நேரங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு சென்றுள்ளது. இதன் பின்னர் பல இணையத்தளங்கள் இச்செய்தியை வெளியிட்டார்கள். இந்த நேரத்தில் இவ்வாறு ஒரு செய்தியை திட்டமிட்டவகையில் ஏன் வெளியிடவேண்டும் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது. இச்செய்திக்கான பதிலையும் இலங்கை அரசு உடனே வழங்கியுள்ளது. குறித்த இச்செய்தி வெளியான உடனே இலங்கை அரசு இவ்வாறு அறிவிக்க என்ன காரணம் ? என்பதும் சந்தேகமே.

இதேவேளை இச்செய்தியை பயன்படுத்தி, சில தமிழ் இணையத்தளங்கள் தம்மை பிரபல்யமாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார்கள். இதனூடாக சில புதிய இணையத்தளங்களை அறிமுகப்படுத்தவும் இவர்கள், முனைந்துள்ளார்கள் என்பதும் வருந்தத்தக்க விடையம் ஆகும்

TPN NEWS

SHARE