ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில்மண்முனைப் பாலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது.

735

Manmunai_Bridge02 மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும்

நிகழ்வில், ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் நொபுகிரோ றோபோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித், உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத், பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மீளகுடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மண்முனைப்பாலத்திற்கு செல்லையா இராசதுரை பிரதேச அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டதுடன் கருங்கற்களும் அங்கு கொண்டுவரப்பட்டிருந்தன. ஆனால், 1983ஆம் ஆண்டுக்கு பின் பாதுகாப்பு அமைச்சு இந்த பால கட்டுமான பணிக்கு அனுமதி வழங்காததையடுத்து இது நிறுத்தப்பட்டிருந்தது. இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் படுவான்கரையில் உள்ள பல கிராமங்கள் நன்மை அடைய உள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்துப் பாதையான மண்முனை ஆற்றுக்கு மேலாக இப்பாலம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கும் ஜெய்க்கா நிறுவனத்திற்குமிடையில் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2012 செப்டெம்பர் 04ஆம் திகதி பட்டிப்பளை பிரதேச பதில் பிரதே செயலாளர் ந.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்றிருந்தது.

பாலத்தின் நிர்மாண பணிகள் 33 மாதங்களில் நிறைவடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்று மண்முனைப்பாலம் 210 மீற்றர் ஆகவும், இரு பக்கங்களிலும் 500 மீற்றர் அளவான மதகாகவும் (கோஸ்வே) மொத்தமாக 1210 மீற்றரில் அமைக்கப்பட்டுள்ளது.

மண்முனைத்துறை பாலத்துக்கான வேலைத்திட்ட அங்குரார்ப்பணம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் ஜப்பானியத் தூதுவர் நொபுகிரோ றோபோ கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித், சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மீளகுடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்டோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றிருந்தது.

ஜப்பான் நாட்டின் நன்கொடையில் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் வகையில் மண்முனை ஆற்றுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் ஜப்பானின் 1473 மில்லியன் ரூபாய் செலவிலும் இலங்கை அரசின் 393 மில்லியன் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ளது.MainmuniMainmuni01Mainmuni02Mainmuni03Mainmuni04Manmunai_BridgeManmunai_Bridge01Manmunai_Bridge02Manmunai_Bridge03Manmunai_Bridge04Manmunai_Bridge05Manmunai_Bridge06Manmunai_Bridge07Manmunai_Bridge08Manmunai_Bridge09

SHARE