இலங்கைக்கு விஜயம் செய்வதில்லை என தீர்மானித்துள்ளதாக எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி, கொழும்பு பேராயருக்கு அறிவித்துள்ளார்.

434

புனித பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வர தயாராகி வரும் நிலையில், அவரது விஜயத்தை எப்படியாவது தவிர்க்க செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

2563283பாப்பரசர் வருகை தரும் காலப் பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதால், பாப்பரசரின் விஜயம் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபைக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முடிவுக்கு கொண்டு ராஜபக்ஷவினர் சண்டித்தனத்தை காட்டும் அளவுக்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.

சில காரணங்களின் அடிப்படையில் பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வதில்லை என தீர்மானித்துள்ளதாக எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி, கொழும்பு பேராயருக்கு அறிவித்துள்ளார்.

எனினும் இதற்கு இணங்க மறுத்துள்ள பேராயர், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்த பின்னர் கத்தோலிக்க திருச்சபை தனது அறிவிப்பை எழுத்து மூலம் வெளியிடும் என கூறியுள்ளார்.

இதன் பின்னர் கத்தோலிக்கரான தனது பாரியார் மூலம் ஜனாதிபதி பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வதை தவிர்ப்பதற்கான அழுத்தங்களை கொடுத்துள்ளார்.

இதற்கு சரியான பதில் எதனையும் வழங்காத கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ராஜபக்ஷவினர் எடுக்கும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்து வருகிறார்.

இதனால், வேறு குழுக்களை பயன்படுத்தி பாப்பரசரின் விஜயத்தை தடுக்காது போனால் வேறு பிரச்சினைகள் ஏற்படாலம் என்று காரணங்களை கூறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாப்பரசரின் இலங்கை விஜயத்தை தடுத்து, அவரது விஜயம் ஜனாதிபதித் தேர்தலினால் தடைப்படவில்லை என்று நாட்டுக்கு காண்பித்து கத்தோலிக்க மக்களின் ஆதரவை பெறுவதே மகிந்த ராஜபக்ஷவின் நோக்கம் எனக் பேசப்படுகிறது.

பிரதம நீதியரசர், எதிர்க்கட்சியின் கொறாடா உள்ளிட்ட பிரதிநிகளுடன் வத்திகான் சென்ற ஜனாதிபதி பாப்பரரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்க செல்லவில்லை எனவும் விஜயத்தை ஒத்திவைக்குமாறு கோரவே சென்றிருந்தாகவும் த இண்டிப்பெண்டன் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாடுகளின் ஆட்சித் தலைவர்களின் அழைப்பை ஏற்று பாப்பரசர்கள் நாடுகளுக்கு விஜயம் செய்வதில்லை என்பது சம்பிரதாயமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நாடுகளின் கத்தோலிக்க திருச்சபைகள் விடுக்கும் அழைப்புகளின் பேரிலேயே பாப்பரசர்கள் நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்வது வழக்கம்.

இதனடிப்படையில், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அழைப்பிற்கு அமையவே பாப்பரசரின் இலங்கை விஜயம் தீர்மானிக்கப்படும். இதனால், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்த அழைப்பை பாப்பரசர் ஏற்றுக்கொண்டார்.

இதற்கு முக்கியமான காரணம் உள்ளது. பாப்பரசராக தெரிவு செய்யப்படுவதற்கான வாக்கெடுப்பின் போது ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்குரிய 42 வாக்குகளை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, தற்போதைய பாப்பரசருக்கு பெற்றுக்கொடுத்திருந்தார்.

இதனை கௌரவப்படுத்தும் வகையில் 6 வருடங்களுக்கு ஒரு முறை பாப்பரசர்கள் மேற்கொள்ளும் ஆசிய மற்றும் அவுஸ்திரேலிய விஜயத்தின் போது இலங்கைக்கு செல்வது என பாப்பரசர் தீர்மானித்தார்.

எவ்வாறாயினும் விஜயத்தை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள பாப்பரசர், விஜயம் செய்வதா இல்லையா என்பதை, தான் தீர்மானிக்க முடியாது எனவும் அதனை இலங்கை கத்தோலிக்க திருச்சபையே தீர்மானிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளதாகவும் அந்த இணையத்தளம்  குறிப்பிட்டுள்ளது.

 

SHARE