புலிகளுக்கு எதிரான தடைநீக்கம் தொடர்பில் நேரடியாக எதனையும் செய்ய போவதில்லை

419

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கம் தொடர்பாக இலங்கையுடன் நெருக்கமான நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த உள்ளதாக ஊடகம் மற்றும் செய்தி துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சர்வதேச உத்தரவுகள் இலங்கைக்குரியன அல்ல என்பதாலும் அதனை ஏற்றுக்கொள்வதில்லை என்ற காரணத்தினாலும் புலிகளுக்கு எதிரான தடைநீக்கம் தொடர்பான வழக்கில் இலங்கை பங்கேற்கவில்லை.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பை இலங்கை ஏற்றுக்கொண்டதற்கு இணையானதாக அது மாறிவிடும் என்பதற்காகவுமே இலங்கை அதில் பங்கேற்கவில்லை.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் நேரடியாக எதனையும் மேற்கொள்ள போவதில்லை. பல்வேறு தரப்புகளுடன் இணைந்து அதற்கு எதிராக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

– See more at: http://www.tamilwin.net/show-RUmszAQVKXjq5.html#sthash.gc7c0rlt.dpuf

SHARE