மட்டக்களப்பு மாவட்டத்தில் 2014 வாக்காளர் இடாப்புக்களின் அடிப்படையில் 3 இலட்சத்து 65 ஆயிரத்து 163 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். நாடளாவிய ரீதியில் இவ்வாண்டுக்கான சகல வாக்காளர் இடாப்புக்களும் கடந்த 31 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அமைய மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஓர் இலட்சத்து 72 ஆயிரத்து 497 பேரும் கல்குடா தொகுதியில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 55 பேரும், பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் 87 ஆயிரத்து 611 பேரும் அடுத்து வரவுள்ள தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6,958 ஆல் அதிகரித்துள்ளது. 2013 இல் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,69,494 பேரும், கல்குடா தேர்தல் தொகுதியில் 1,02,970 பேரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 85,741 பேருமாக 358,205 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.