சிறுநீரக நோயாளிகளை புறக்கணிக்கும் அரசாங்க வைத்தியசாலைகள்!: வினோதலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு

478
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட வறிய மக்கள் அரசாங்க வைத்தியசாலைக்கு செல்லும் புறக்கணிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வினோதலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள், தனியார் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்து கொண்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அரசாங்க வைத்தியசாலைக்கு செல்லும் போது அந்த நோயாளிகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலை மாற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இந்த குற்றச்சாட்டை பாராளுமன்ற உறுப்பினர் வினோதலிங்கம் முன் வைத்தார்.

 

SHARE