மகிந்த குடும்பத்திற்கு எதிராகமுக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு வாபஸ்- மைத்திரிபால விசேட அறிவிப்பு: ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு

435
maithrirajitha_CI
 மகிந்த குடும்பத்திற்கு எதிராகமுக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு வாபஸ்- மைத்திரிபால விசேட அறிவிப்பு: ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு
Mervin-Worship-to-Mahinda

மகிந்த குடும்பத்திற்கு எதிராக அரச அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வாபஸ் பெற இருப்பதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைதிரிபால சிறிசேன, ராஜித சேனாரட்ன, மேர்வின் சில்வா ஆகியோரின் பாதுகாப்பு உஸ்தியோகஸ்தர்களே இவ்வாறு வாபஸ் பெற உள்ளதாக அந்த இனையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை ஜனாதிபதி மகிந்தவிற்கும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையில் தற்பொழுது அலரி மாளிகையில் கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரியவருகின்றது.

அமைச்சர் மைத்திரிபால தலைமையில், பத்தரமுல்ல பிரதேசத்தில் நிகழ்வொன்று ஏற்பாடாகியிருக்கும் நிலையில், அந்நிகழ்வில் கலந்துகொள்ளாத அமைச்சர், ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பு – ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக சகல ஊடகவியலாளர்களும் கொழும்பு புதிய நகர மண்டபத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பு 10.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அங்கு செய்தியாளர் சந்திப்புக்கான தயார்ப்படுத்தல்கள் காணப்படவில்லை என எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் மைத்திரிபால நடத்தும் ஊடக சந்திப்பு மேலும் தாமதமாகும் என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை அமைச்சர் மைத்திரிபால இன்று தனது அமைச்சுடன் சம்பந்தப்பட்ட பணி நியமனங்களை வழங்கும் நிகழ்விலும் கலந்து கொள்ளவிருந்ததுடன் அது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மைத்திரிபாலவின் ஊடகவியலாளர் சந்திப்பு பிற்போடப்பட்டது

அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை வரை பிற்போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று மதியம் கொழும்பு நகர மண்டபத்தில் அமைச்சர் மைத்திரிபால கலந்து கொள்ளும் முக்கிய ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெறவிருந்தது.

இதற்காக வேறு நபரின் பெயரில் நகர மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான தகவல் அறிந்தவுடன் தற்போது கொழும்பு நகர மண்டப பகுதியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்கள் ஏராளமாகத் திரண்டுள்ளனர்.

எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் குறித்த சந்திப்பு இன்று மாலை வரை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில வேளை இந்த சந்திப்பு ரத்துச்செய்யப்படவும் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே தற்போது அலரி மாளிகைக்கு வரவழைக்கப்பட்டுள்ள அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமைச்சர் மைத்திரிபாலவின் மகள் பொலன்னறுவை பிரதேச வறிய இளைஞன் ஒருவனுடன் காதல் வயப்பட்டிருந்த நிலையில், குறித்த இளைஞன் இரவோடு இரவாக கடத்தி வரப்பட்டு பஸ்ஸில் மோதி படுகொலை செய்யப்பட்டிருந்தான்.

இந்த சம்பவத்தில் அமைச்சர் நேரடியாக தொடர்புபட்டிருப்பதாக 90களின் இறுதியில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது.

மேலும் அமைச்சரின் மகனுக்கு எதிராகவும் கொலைக்குற்றச்சாட்டொன்று நிலுவையில் உள்ளது.

இது தொடர்பான கோப்புகள் மற்றும் மைத்திரிபால மகாவலி அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சில் நடைபெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பான கோப்புகளும் தற்போது அலரிமாளிகை கலந்துரையாடல் அறை மேசை மீது வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

எனினும் அமைச்சர் மைத்திரிபால மற்றும் ஜனாதிபதி இருவருக்குமிடையிலான கலந்துரையாடல் அறைக்குள் பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேம்ஜயந்த், டளஸ் அலஹப்பெரும, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

 

SHARE