இந்திய அரசால் கட்டப்பட்ட கட்டடம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு ஒப்படைப்பு

389

இந்திய அரசால் புதிதாக கட்டப்பட்டுவரும் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் 7 சத்திரசிகிச்சை கூடங்களும், ஐ.ஊ.ரு எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவும், 150 கட்டில்களுடன் பணம் செலுத்தி தங்கும் அறைகளும், குறைந்த கட்டணம் செலுத்தி தங்கும் அறைகளும், சாதாரண அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் அதனை உடனே தடுக்கும் முழுமையான வசதி, மற்றும் முழுமையாக குளிரூட்டப்பட்ட வைத்தியசாலையாக திகழவுள்ளது. மாசு அடைந்த நீரை சுத்திகரிக்கும் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இப்புதிய வைத்தியசாலை எதிர்வரும் 05.12.2014 அன்று வைபவ ரீதியாக மத்திய மாகாண ஆளுனர் டிக்கிரிகொப்பேகடுவ அவர்களிடம் இந்திய அரசினால் இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் கண்டி உதவி தூதுவர் முன்னிலையில் கையளிக்கவுள்ளது. அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், மத்தியமாகாண சுகாதார அமைச்சர் மாகாணசபை, நகரசபை உறுப்பினர்கள் மற்றும் சுகாதார அத்தியேட்சகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். இந்நிகழ்வு கட்டிடத்தை கையளிக்கும் நிகழ்வு மட்டுமே. வைத்தியசாலை இயங்க இன்னும் சிலநாட்களாகுமென வைத்தியசாலை உயர் அதிகாரி தெரிவித்தார்.

DSCF0149

DSCF0171

DSCF0184

DSCF0191

DSCF0144
தகவலும் படங்களும் :-  செ.தி.பெருமாள்.
மஸ்கெலியா.

 

SHARE