சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஆறு தொகுதி அமைப்பாளர்கள் அரசாங்கத்திடம் இருந்து கோடிகளை வாங்கிக் கொண்டு கம்பி நீட்டியுள்ளனர்.

390

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பலம் மற்றும் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து்ச் செல்கின்றது. இதனைத் தடுக்க வழியறியாது ஆளும்கட்சி திகைத்துப் போயுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் சாதாரண கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரை ஆளுங்கட்சிக்கு இழுத்து ஊடகங்களில் ஷோ காட்ட அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தொகுதி அமைப்பாளர்கள் சிலரை அரசாங்கத்துக்கு கட்சி தாவ வைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த ஆறு தொகுதி அமைப்பாளர்களுக்கு சில லட்சங்கள் வரை அட்வான்ஸ் தொகை தரப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று அவர்கள் சஜின் வாஸ் எம்.பி.யின் அலுவலகத்துக்கு வந்து மீதித் தொகையை பெற்றுக் கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உடன்பாட்டின் பிரகாரம் குறித்த ஆறு தொகுதி அமைப்பாளர்களும் இன்று சஜின் வாஸ் குணவர்த்தனவின் அலுவலகம் வந்துள்ளனர்.

எனினும் அவர்கள் வருவதற்கு முன்னரே சஜின் வாஸ் அலுவலகத்திற்கு ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தனர். இதனைக் கண்டதும் அங்கு வந்த சரத் பொன்சேகா கட்சியினர் கோபத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

ஆளுங்கட்சிக்கு இணைவதற்கு சம்மதம் தெரிவித்து வந்தவர்கள் இடைநடுவில் திரும்பிப் போன சம்பவம் ஆளுங்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE