பாராளுமன்ற உறுப்பினர் சிறீரங்காவினால் 2014.11.30 அன்று நடத்தப்பட்ட சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சிக்கு அனைத்து முஸ்லீம் பள்ளிவாசல்கள் சம்மேளனம்; கண்டனம் – தினப்புயல் ஊடகவியலாளரின் சரமாரியான கேள்விக்கனைகள். (வீடியோ இணைப்பு)

399

வவுனியா ஹொரவப்பொத்தானயில் அமைந்துள்ள முஸ்லீம் சம்மேளனத்தினால் இன்று (27.11.2014) காலை 11.00 மணியளவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இதன்போது இலங்கையின் ஊடக நிறுவனமான மஹாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சியினால் 2014.11.30 அன்று நடத்தப்பட்ட மின்னல் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் சிறீரங்கா அவர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களையும், அவரது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை தனிப்பட்ட ரீதியில் அவமானப்படுத்தி, அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் விவாதத்தினை நடத்தியமையானது, வன்னி மாவட்ட முஸ்லீம் சமூகத்தினரின் வெறுப்பினையும், கண்டனத்திற்குமுரியதாக மாறியிருக்கின்றது என்பதனை மஹாராஜா நிறுவனத்தின் கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம் என்றும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் அவர்கள் இக்கட்சியில் இருந்து வெளியேறியமை தொடர்பாக இடம்பெற்ற இந்த விவாதத்தின் போது தொகுப்பாளர் சிறீரங்கா தனிப்பட்ட கருத்துக்களுக்கு முன்னுரிமையளித்து, முஸ்லீம் மக்களை அவமானப்படுத்தும் வகையில் தொடராக சில பொருத்தமற்ற கருத்துக்களை ஆழப்பாதிக்கும் வகையில் செய்ததை இந்த ஒளிபரப்பின்போது நாம் அவதானித்தோம் என்றும், அரசியல் பழிவாங்கலில் இந்நிறுவனம் செயற்படுகின்றது என்றும், 30வருட கால அவலத்தை சந்தித்துவந்த வடகிழக்கு முஸ்லீம் மக்கள் தற்பொழுது மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திகள் பாதிக்கப்படும் என்கின்ற காரணத்தினாலும் இதனைச் சுட்டிக்காட்டுகின்றோம். அது மட்டுமல்லாது வவுனியா மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனமும் கையெழுத்திட்ட கோவையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக தினப்புயல் பத்திரிகையின் ஊடகவியலாளர் கேள்வி எழுப்புகையில், அநுராதபுரம், தர்க்கா, தம்புள்ளை, திருகோணமலை போன்ற இடங்களில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதைத்தொடர்ந்தும், அளுத்கம மற்றும் பேருவளை போன்ற இடங்களில் இடம்பெற்ற கலவரங்களை சக்தி நிறுவனம் ஒளிபரப்புச் செய்திருந்தது. இந்த அரசாங்கம் முஸ்லீம் மக்களுக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான முறைப்பாடுகளை தனது நிகழ்ச்சியில்; இந்த சக்தி நிறுவனம் ஒளிபரப்புச் செய்திருந்தது. முஸ்லீம் மக்களுக்கு தொடர்ந்தும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. பொதுபலசேனா என்ற அமைப்பினால் முஸ்லீம் மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டபோது வவுனியாவில் அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றபோது, இந்த சம்மேளத்தினர் எங்கே போனீர்கள்? என அடுத்தடுத்து கேள்விகளைத் தொடுத்தபோது, அதற்கு முஸ்லீம் சம்மேளனத்தினால் வழங்கிய பதில்களை காணலாம்.

THINAPPUYAL NEWS

SHARE