பாரம்பரிய கலைகள், ஆன்மிகத்தில் வஞ்சியன்குளம் கிராமம் சிறந்து விளங்குகின்றது. ஆனந்தன் எம்.பி

453

வஞ்சியன்குளம் கிராமமானது கல்வியிலும், ஆன்மிகத்திலும், பாரம்பரிய கலைகள், நாட்டுக்கூத்து, பாரம்பரிய சித்த வைத்திய துறையிலும் சிறந்து விளங்குவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மன்னார் நானாட்டான் வஞ்சியன்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய பரிசளிப்பு விழாவும் ஒளிவிழாவும், மாணவர்களுக்கு மகிழ்ச்சியான கற்றலுக்கு நல்லதொரு உந்துசக்தியாக அமையும் என்று நான் நம்புகின்றேன்.
இந்த கிராமத்தின் குடிமகன் இந்த பாடசாலையின் பழைய மாணவனும் மடு உதவி அரச அதிபருமாகிய கலாபூசணம் மன்னார் மணி மரியதாஸ் அவர்களை கௌரவித்து பாராட்டுவதானது இவரைப்போன்று பல்வேறு துறைசார்ந்த அநுபவங்கள் கொண்டவர்களாக சிறந்த நல்ல தலைவர்களாக இங்குள்ள மாணவர்களும் எதிர்காலத்தில் வரவேண்டும் என்ற சேதி இதனூடாக சொல்லப்பட்டுள்ளது. அதற்காக வாழ்த்தி வரவேற்கிறேன்.
இந்த மாணவர்களின் வளமான கற்றலுக்காக கற்றல் உபகரணங்களுக்கு நிதியுதவி வழங்கிய லண்டனைச்சேர்ந்த டொக்டர் ரவி அவர்களுக்கும், ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணிக்கு பொறுப்பான திரு.திரவியநாதன் ஐயாவுக்கும் வன்னி மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மன்னார் நானாட்டான் வஞ்சியன்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் ஒளிவிழாவும், பரிசளிப்பு விழாவும், கலாபூசணம் மரியதாஸ் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று (04.12.2014) பாடசாலையின் அதிபர் ஏ.ஆர்.அமலதாசன் தலைமையில் நடைபெற்றது.
unnamed (4) unnamed (3)
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சிவசக்தி ஆனந்தன்(பா.உ), பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய ஞானாதிக்கம், நானாட்டான் பிரதேச சபையின் உபதவிசாளர் மரியதாஸ் றீகன், மன்னார் நகரசபை உபதவிசாளர் ஜேம்ஸ் ஜேசுதாசன், மடு உதவி அரச அதிபர் கலாபூசணம், மன்னார் மணி மரியதாஸ், மன்னார் நகரசபை உறுப்பினர் ரட்ணசிங்கம் குமரேஸ், சுற்றாடல் ஆணையாளர் தாவீது டேவிட் மாஸ்டர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் பிரான்ஸ் ரி.ஆர்.ரி சமுகப்பணி ஊடாக லண்டனிலிருந்து பார்வை ஊடகத்தின் ஆசிரியர் டொக்டர் ரவியின் நிதிப்பங்களிப்புடன் வழங்கப்பட்டன.
பாடசாலை அதிபர் ஏ.ஆர்.அமலதாசன், ரி.ஆர்.ரி வானொலிக்கும், டொக்டர் ரவிக்கும் பாடசாலை சமுகம் சார்பாக நன்றி தெரிவித்தார்.
 unnamed (4) unnamed (7)

 

SHARE