இனப்பிரச்சினை சிங்கள மக்கள் மத்தியில் இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகம் பேணப்படவேண்டும் – ஊடகவியலாளர் சந்திப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன்

397

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வவுனியா சொர்க்கா ஹோட்டலில் 06.12.2014 அன்று சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாடு செய்திருந்தது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர்கள் இரண்டுவிடயங்கள் தொடர்பாக இன்று காலையிலிருந்து விவாதித்திருந்தோம். ஓன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல். இரண்டாவதாக எங்களது கட்சி நடவடிக்கைகளை விஸ்தரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தோம். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கின்றவர்களின் நடவடிக்கைகள், குறிப்பாக வடகிழக்கின் நிலவரங்கள், மக்களது மனோநிலைகள், தேர்தல் தொடர்பான கருத்துக்கள், கூட்டமைப்பு இதுதொடர்பாக என்ன நடவடிக்கையினை எடுக்கவேண்டும். அதற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் எவ்வாறு செயற்படவேண்டும் போன்ற பல விடயங்கள் இந்த கருத்துப்பரிமாற்றத்தில் பேசப்பட்டிருக்கின்றது.

முக்கியமாக 18வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இரண்டு வேட்பாளர்கள் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். ஒருவர் மஹிந்த ராஜபக்ஷ. மற்றையவர் மைத்திரிபால சிறிசேன அவர்கள். எந்த ஜனாதிபதி வேட்பாளராகவிருந்தாலும் நாங்கள் ஒருவிடயத்தினை கவனத்தில் எடுத்திருக்கின்றோம். அதில் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களுடைய பொதுவான பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தோம். ஓன்று நிறைவேற்றதிகாரம் கொண்ட ஆட்சிமுறை. இவ்வாட்சிமுறை அடக்கப்படவேண்டும். ஊழல் அற்ற ஆட்சிமுறை இடம்பெறவேண்டும். குடும்ப அரசியல் என்ற ஆட்சி இல்லாமல்போக வேண்டும். ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவையெல்லாம் மூவின மக்களுக்கும் இருக்கக்கூடிய பொதுவான பிரச்சினைகளாகும். அதேசமயம் தமிழ் மக்களுக்கு பிரத்தியேகமான பிரச்சினைகள் இருக்கின்றது.

தமிழ் மக்கள் முழுமையாக இன்னமும் மீளக்குடியமர்த்தப்படவில்லை. யுத்தம் நிறைவடைந்து 05ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், மக்கள் இன்னமும் அகதி முகாம்களில் இருக்கின்றார்கள். சம்பூரில் 2000இற்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றார்கள். அவர்களது காணிகள் களவாடப்பட்டிருக்கின்றது. முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படவில்லை. இதற்கு காரணம் இராணுவம் பலவந்தமாக காணிகளை அபகரித்துள்ளது.
இப்பிரச்சினையானது தமிழ் மக்கள் மத்தியில் சாதாரணமானதொரு விடயமல்ல. தமிழ் மக்கள் அவர்களது காணிகளுக்கு மீண்டும் செல்லவேண்டும். அதுமட்டுமல்லாது யுத்தத்தினால் காணாமற்போனோர்கள் தொடர்பாக 20,000 இற்கும் மேலான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு எவ்வித பயனுமில்லை. நூற்றுக்கணக்கான கைதிகள் கடந்த 20 வருடங்களாக எந்தவொரு விசாரணைகளும் இல்லாது காணப்படுகின்றனர். இவையும் இதில் உள்ளடக்கப்படுகின்றன. இனப்பிரச்சினைக்கான எந்தவிதமான தீர்வுகளையும் அரசு மேற்கொள்ளவில்லை. இப்பிரச்சினைகள் சிங்கள மக்களுக்கு இல்லை.

யுத்தப்பிரச்சினைகள் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள். இப்பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதித்தேர்தலின் இரு முக்கிய வேட்பாளர்களும் வாய்திறக்கில்லை. இவ்வாறான பிரச்சினைகள் இருப்பதாக இவர்கள் காட்டிக்கொள்ளவுமில்லை. அரச தரப்பில் உள்ளவர்கள் கூறுகிறார்கள் தாம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்ப்pடம் பேசத்தேவையில்லை. நாங்கள் வாக்குகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தெரியும். எதிர்த்தரப்பினர் கூறுகிறார்கள் சமஸ்டி ஆட்சிமுறையினை வழங்கமாட்டோம். ஜெனிவா விசாரணைகளை ஏற்றுக்கௌ;ளமாட்டோம். புலம்பெயர் நாட்டிலிருக்கும் புலிகளையும் ஒழிப்போம்.
என்னனென்னவற்றை இல்லாமல் செய்வோம் என்க் கூறுகிறார்களே தவிர பிரச்சினை தீர்வுக்கு ஒரு வழியினையும் கூறவில்லை. இந்த நிலவரத்தில்தான் தேர்தல் நடைபெறப்போகிறது. எனவே எமது மத்தியகுழு தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கின்றது.; இதுதொடர்பில் ஈ.பி.ஆர.;எல் எதிர்வரும் நாட்களில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இடம்பெறும் சந்திப்பில், எமது கட்சியின் கருத்துக்கள் தொடர்பில் அவர்களிடம் தெரிவித்து ஒரு தீர்மானத்தினை எடுப்போம்.

ஜனநாயகத்திற்காக போராடி வந்தது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மாத்திரம்தான் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன். வடகிழக்கில் இராணுவ ஆட்சி, அராஜகத்திற்கெதிராக வடகிழக்கில் போராடிக்கொண்டிருப்பவர்கள் நாங்கள். ஆனால் இன்று தேர்தல் என்ற ஒன்று வந்தபின்னர் ஜனநாயகத்தினை நிலைநிறுத்தப்போவதாக கூறுகின்றார்கள். அதுமாத்திரமல்ல ஆளுந்தரப்பிலிருந்து வெளியில் வந்தவர்கள் கூட இன்று நாங்கள் ஜனநாயகத்தினை நிலைநிறுத்தப்போகின்றோம் எங்களுக்கு கைதாருங்கள் எனத் தெரிவிக்கின்றனர். வடகிழக்கில் நாங்கள் ஜனநாயகத்தினைப்பற்றி பேசியபொழுதும், வடகிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்துங்கள் எனக்கூறியபொழுதும், வடகிழக்கு மக்களுக்கு ஜனநாயகம் தேவை எனக்கூறியபோதும் யாருமே வாய்திறக்கவில்லை. எந்ததரப்பிலிருந்தும் எங்களுக்கு ஆதரவும் கிட்டவில்லை.

தமிழர்களின் பிரச்சினையில் தீர்வினைக் வழங்கிவிட்டால் சிங்கள மக்கள் எம்மை ஒதுக்கிவிடுவார்கள் எனக் கருதினார்களே தவிர, ஜனநாயகத்திற்காகவும், இராணுவ ஆட்சிக்கெதிராகவும் குரல்கொடுக்கக்கூடியவர்கள் என்று யாரும் சிந்திக்கவில்லை. நாங்கள் ஜனநாயகம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். முக்கியமாக தமிழ்மக்களினுடைய பிரச்சினையில் ஆட்சியாளர்கள் கவனமெடுக்கவேண்டும். மேலேகுறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிச்சயமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு தெரிவிப்போம். அதன் மூலம் நாங்கள் சரியான முடிவுகளை எடுப்பதற்கும் தயாராகவிருக்கின்றோம். எமது கட்சியும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் ஆதரவாக இருக்கும் என்று கூறிக்கொள்கின்றேன் என்று ஊடகவியலாளர் சந்திப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் குறிப்பிட்டார். இச்சந்திப்பில் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான இந்திரராசா, ரவிகரன், சிவமோகன், கிழக்குமாகாணசபை உறுப்பினர் துரைரட்ணம் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். அங்கு தினப்புயல் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுரேஸ் பிரேமச்சந்திரன்…(வீடியோ இணைப்பு)

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

 

TPN NEWS

SHARE