மஹிந்தவின் ஊடக அடக்குமுறை தொடர்கிறது – ஜனாதிபதித் தேர்தல் விளம்பரம் பத்திரிகைகளில் திணிக்கப்பட்டதா? அல்லது விரும்பியே பிரசுரிக்கப்பட்டதா? குழப்பத்தில் மக்கள்.

415

0-480x264

நேற்றைய தினம் வெளிவந்த வீரகேசரி, சுடரொளி, தினக்குரல், உதயன், தினகரன், லங்காதீப, லக்பிம போன்ற பத்திரிகைகள் வரலாற்று சிறப்புமிக்க இந்நாள் ஞாபகமுள்ளதா? என்று யாழ்தேவி புகையிரதத்தினையும், அவருடைய புகைப்படத்தினையும் பத்திரிகையின் முன்பகுதியில் பிரசுரித்துள்ளமையானது ஊடக சுதந்திரத்தினை மீறி செயற்படும் ஒரு செயலாகும். பத்திரிகையின் உள்பக்கத்திலோ அல்லது பின்பக்கத்திலோ கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள் பிரசுரிக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கும் பத்திரிகைகளான தினக்குரல், சுடரொளி, வீரகேசரி, உதயன் போன்ற பத்திரிகைகளில் இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவினை விளம்பரப்படுத்தியிருப்பது தமிழினத்திற்கெதிரான அடக்குமுறையினைக் வெளிப்படுத்தும் விடயமாகவே உள்ளது.

மறுபக்கத்தில் கோடிக்கணக்கான பணத்தினைக் கொடுத்து விளம்பரம் செய்யப்பட்டதா? அதற்கு இப்பத்திரிகைகள் அடிமையாகிவிட்டதா? என கேள்விகள் எழுகின்றது. எந்தவொரு அரசாங்கங்களாலும் செய்யமுடியாத அபிவிருத்திகள் மஹிந்தவால் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மஹிந்தவினைக் பொறுத்தவரையில் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பன மறுக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறான அதிகாரத்தினைப் பயன்படுத்தினாலும் கூட, சிங்கள தேசம் இன்று ஆட்சிமாற்றத்தினையே விரும்புகின்றது. இவ்வாட்சிமாற்றத்தினை ஏற்படுத்தும் வகையில் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் மூலம் இன்று மக்கள் மத்தியில் விருட்சம் பெற்றுள்ளது. அதற்காக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஊடகங்களை கட்டுப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம். இவரின் ஆட்சிக்காலத்தில் மாத்திரம் 33 ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்பட்டும், காணாமற்போயும், வெளிநாடுகளில் தஞ்சமடைந்துமுள்ளனர்.

சமூக ஏற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருந்த இடம் தெரியாமல் போயுள்ளனர். இவற்றிற்கெல்லாம் மஹிந்தவின் அரசே காரணமாக அமையப்பெற்றது. ஆனால் தற்போதைய காலப்பகுதியில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையினை வழங்குவதில் அரசு தயக்கம் காட்டிவரும் அதேநேரம், சிங்கள இன மக்களுக்கு பதில் கூறவேண்டிய தருணமும் வந்திருக்கின்றது. சிங்கள இனவாதக்கட்சிகள் ஒருபோதும் தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்க விரும்பமாட்டார்கள். ஆகவே ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன இருவரும் உத்தியோகபூர்வமாக எதனையும் வெளியிடவில்லை. எனினும் ஊடகங்களைக் கட்;டுப்படுத்துவதில் குறியாகவிருக்கின்றார் மஹிந்த.
ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதனூடாக அவருடைய ஆட்சி நிரந்தரமற்றதொன்றாகவே அமையப்பெறும். காரணம் ஊடகங்களே மக்கள் மத்தியில் நன்மை தீமை என்பவற்றை கொண்டுசேர்ப்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. அதனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மஹிந்த சிந்தனை மாற்றம் பெரும் என்று அர்த்தமில்லை. இதனை மஹிந்தவின் புலனாய்வாளர்கள் வலியுறுத்துவது சிறந்ததொன்றாகும். இவ்வாறான ஊடக அடக்குமுறை என்பது சர்வதேச ரீதியாக உற்றுநோக்கும்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

உதயன் பத்திரிகையினைப் பொறுத்தவரையில் வடபகுதி மக்கள் பெரும்பாலானோர் விரும்பி பார்க்கக்கூடியதாகவிருக்கின்றது. கடந்தகாலங்களாக பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்து இம்மண்ணில் காலூன்றி நிற்கின்றது. சிங்கள இனவாதிகளினுடைய பிரச்சினைகள் தென்மாகாணத்திலே தற்போது காணப்பட, அதற்கு துணைபோவதாகக்கூறி தமிழ் ஊடகங்களை தேர்தல் காலத்தில் நசுக்குவதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாததொன்றாகும். இதனை தினப்புயல் ஊடக நிறுவனம் வன்மையாகக் கண்டிக்கின்றது மட்டுமல்லாது ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் சுதந்திரமாக செயற்பட, யுத்தத்தினை முடிவிற்குக்கொண்டுவந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கையினையும் விடுக்கின்றது. உங்களுடைய கௌரவப் பிரச்சினைக்காக ஊடகங்கள் மீது அழுத்தம் கொடுப்பதை தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள்.

ஒருவேளை ஆட்சி மாற்றம் பெற்றாலும் கூட மைத்திரியின் ஆட்சி ஒழுங்காக அமையவில்லை என மறுபக்கத்தில் ஒளிபரப்புச் செய்யக்கூடியவை இந்த ஊடகங்களே என்பதை கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் இவ் ஊடக நிறுவனம் கேட்டுக்கொள்கின்றது.

UPFA-014UPFA-015

 

0-480x264


UPFA-015

SHARE