கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் டக்ளஸ் நரியும் சிறீதரன் புலியும் மோதல்

455

kili_9_12_2014_3

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று முற்பகல் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தது. குறிப்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதன்போது முதலமைச்சர், விவாதத்தைக் கைவிடுமாறு கோரினார். எனினும் அவர்கள் நிறுத்த வில்லை. இதனால் ஆத்திரமடைந்த முதலமைச்சர் நண்பகல் 12 மணியளவில் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று இணைத் தலைமைகளான வடமாகாண முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தனது உரையில்,

வடமாகாணத்துக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு தொடர்பில் தவறான தகவலை மக்களுக்கு வழங்கி வருவதாகவும் அதிகாரங்களை வழங்காமல் வடமாகாண சபையை தமது முகவராக பயன்படுத்தவும் தமது திணிப்பை மேற்கொள்ள முனைவதாகவும் குற்றம் சாட்டிய முதல்வர் கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதியை தாம் சந்தித்தபோது அவர் பட்டும்படாமல் அதிகாரங்கள் தொடர்பில் பேசியதாகவும் அவர் எந்தவித அதிகாரங்களையும் வடமாகாண சபைக்கு தரவில்லை எனவும் தமிழர்களுக்கு அவர் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லையெனவும் தெரிவித்ததுடன் தாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சபை என்ற அடிப்படையில் எமது மக்களுக்காக முடிந்தளவு பாடுபடுவோம் என வாக்குறுதி அளித்தார்.

வறட்சியால் ஏற்பட்ட கிளிநொச்சியின் பேரழிவுகள் தொடர்பான எந்தவிதமான புள்ளிவிபரங்களும் கிளிநொச்சி அரச அதிபரிடம் இல்லை.

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விடயங்கள் இன்றைய மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கருத்திலெடுக்கப்பட்டபோது கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த கால கொடுரமான வறட்சியின் போது ஏற்பட்ட அழிவுகள் தென்னை தொடர்பான அழிவுகள் பற்றிய புள்ளிவிபரங்கள் உள்ளதா எனவும் இதற்கு ஏதாவது நட்ட ஈடு வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என வினாவப்பட்ட போது அரசாங்க அதிபர் தம்மிடம் அந்த புள்ளிவிபரங்கள் இல்லையெனவும் அது பனை தென்னை அபிவிருத்தி சபையிடம் தான் உள்ளது என தெரிவித்தார்.

பனை தென்னை அபிவிருத்தி சபைப்பிரதிநிதியிடம் வினாவியபோது அவர் தம்மிடமும் அழிவுகள் தொடர்பாக புள்ளிவிபரங்கள் இல்லை என தெரிவித்தார்.இதனால் சபையில் விசனம் ஏற்பட்டது. கிளிநொச்சி மாவட்டம் தொடர்பாக புள்ளிவிபரங்கள் மாவட்ட அரசாங்க அதிபரால் சரியாக பேணப்படவில்லை என்பது அம்பலமாகியதுடன் மாவட்ட அரசாங்க அதிபரின் அசமந்தப்போக்கால் கடந்த வரட்சியின்போது ஏற்பட்ட அழிவுகளுக்கான நிவாரணங்களை கிளிநொச்சி மாவட்ட மக்கள் பெறமுடியாமல் போயுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போனோர் தகவல்கள் தொடர்பில் சிறீதரன்-டக்ளஸ்தேவானந்தா முறுகல்

கிளிநொச்சி மாவட்ட புள்ளிவிபரங்கள் தொடர்பான விடயத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் காணாமல் போனோர் தொடர்பாக சரியான புள்ளிவிபரங்கள் அரசாங்க அதிபரிடமோ மாவட்டச்செயலகத்திடமோ இல்லையெனவும் சரியான புள்ளிவிபரங்களை கிராம ரீதியாக சுதந்திரமாக உறுதிப்படுத்தி கணக்கெடுக்க இராணுவம் விடாது என தெரிவித்தபோது.காணாமல் போனார் பலர் டயஸ்போறாவாக உள்ளார்கள் எனவும் நீங்கள் காணாமல் போவதற்கு காரணமானவர்கள் புலிகள் ஆட்களை பிடித்து பயிற்சி அளித்து காணாமல் போகச்செய்தார்கள் அதற்கு நீங்களும் ஒத்துழைப்பு வழங்கினீர்கள் என பா.உறுப்பினர் சி.சிறீதரனை நோக்கி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்துத்தெரிவிக்க பா.உறுப்பினர் சி.சிறீதரன் பதிலுக்கு அமைச்சரை தமிழ் மக்கள் அழிய நூறு வீதம் நீங்களே காரணமென கடும்தொனியில் கூறி வாக்குவாதப்பட்ட நிலையில் இணைத்தலைமையான முதலவர் சபையில் இருந்து வெளிநடப்புச்செய்து சென்றுவிட்டார்.

பின் சற்று நேரத்தில் வேறு விடயங்களுக்கு சென்றது.

புதிதாக ஆசிரியர்களை அதிபர்கள் பாடசாலைகளை பதிவு செய்தது தொடர்பாக எனக்குத்தெரியாது கையை விரித்த கல்வி அமைச்சர்

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிபர்கள் பாடசாலைகளில் புதிதாக ஆசிரியர்களை பதிவுசெய்தது தொடர்பாக சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டபோது.இது வடமாகாண சபைக்குத்தெரியாமல் தன்னிச்சையாக செய்யப்படுகின்ற விடயம் கல்வி அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார்.இந்த புதிதாக ஆசிரியர்களை பதிவு செய்யும் விடயத்தில் உள்வாங்கப்படுவதாக சொல்லப்படுகின்ற ஆசிரியர்கள் எதிர்காலத்தில் நிரந்தர நியமனங்களுக்கு உள்வாங்கப்படமாட்டார்கள் என இணைத்தலைமைகள் தெரிவித்துள்ளன.

ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பாக கிளிநொச்சி வலய கல்விப்பணிமனை பிரநிதி விடயங்களை சபையில் சமர்பித்தார்.இதன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கடந்த பல மாதங்களுக்கு முன் கிளிநொச்சியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக நான் தெரிவித்திருந்தேன்.

ஆனால் இன்னும் அந்தப்பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகள் நிரப்பப்படவில்லை என தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன் போது கருத்துத்தெரிவித்த பா.உறுப்பினர் சந்திரகுமார் ஆசிரியர்கள் குறைந்த நேரம் வேலை செய்கின்றார்கள்.வேறு திணைக்களங்கள் அதிகம் பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து நீண்ட காலம் வேலை செய்கின்றார்கள்.ஆனால் ஆசிரியர்களுக்கு மட்டும் கஸ்டப்பிரதேசங்களில் வந்துவேலை செய்வதற்கு குறுகிய கால வரையறைகள் பற்றி சிந்தனை செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல அவர்கள் நீண்ட காலங்கள் வன்னிப்பிரதேசங்களில் வேலை செய்ய தயாராக இருக்கவேண்டுமென தெரிவித்தார்.

கடத்தப்படும் சட்டவிரோத மாட்டிறைச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் இறைச்சிக்காக மாடு வெட்டும் விடயத்தில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் காணப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வெட்டப்படும் மாட்டு இறைச்சிகள் பெருந்தொகையில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக வேறு மாவட்டங்களுக்கு கடத்தப்படுவதாகவும் இது தொடர்பாக பொலிஸ் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லையென கூறப்பட்டுள்ளதுடன் இது போலவே கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக பனைகள் அழிக்கப்படுவதற்கும் பொலிசார் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சட்ட அனுமதி பெற்று வெட்டப்படும்போது அதில் பொலிசார் சென்று இடையூறு விளைவிப்பதாகவும் சபையில் குற்றம் சுமத்தப்பட்டது.

மாவட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் நகர அபிவிருத்தி அதிகார சபையால் திருடப்படும் காணி

கிளிநொச்சியில் டிப்போச்சந்திக்கு அருகாக உள்ள நிலம் பச்சைப்பூங்காவிற்கென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியாமல் நகர அபிவிருத்தி அதிகார சபையால் அளக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதேசபை தலைவர் குகராசா கடும் விசனத்தை வெளியிட்டார்.இது தொடர்பாக கரைச்சி பிரதேச செயலர் கருத்துத்தெரிவித்தபோது தான் இக்காணிக்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மீது குற்றம் சுமத்த வந்து அதிகாரிகள் முன் அவமானப்பட்ட ஈ.பி.டி.பி

இன்று ஆரம்பித்திலிருந்து வடமாகாண சபையின் செயற்பாடுகள் நிதி செலவழிகப்படாமை தொடர்பில் குற்றம் சுமத்திய ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தவராசா சந்திரகுமார் ஆகியோரின் கருத்துக்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்த வடமாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா ஆகியோர் வடமாகாண சபைக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் தகுந்த விளக்கமளித்ததுடன் தைமாதத்தின் பின் நீங்கள் தலைமையில் இருப்பீர்களோ தெரியாதோ என தெரிவித்தபோது சபையில் ஒரு மகிழ்ச்சி நிலவியதை அவதானிக்க முடிந்தது.

TPN NEWS

SHARE