ஜனாதிபதி தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 87 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

396

ஜனாதிபதி தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 87 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

இதில் 26 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுதப் பயன்பாடு தொடர்பில் இதுவரையில் எட்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரையில் மொத்தமாக 53 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆதரவாளர்களுக்கு இடையிலான மோதல்கள் தாக்குதல்கள் குறித்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் மேலும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறக் கூடுமென கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ok-768x1024

SHARE