ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி மைத்திரிபால சிறிசேனவிடம் நாட்டை ஒப்படைப்பதன் மூலம் உண்மையான வெற்றி மக்களுக்கே கிடைக்கும்.

373

 

அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிருலப்பனையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்று நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி மைத்திரிபால சிறிசேனவிடம் நாட்டை ஒப்படைப்பதன் மூலம் மைத்திரிபாலவோ,  ரணில் விக்ரமசிங்கவோ, சம்பிக்க ரணவக்கவோ வெற்றியீட்டப் போவதில்லை.

உண்மையான வெற்றி மக்களுக்கே கிடைக்கும்.

ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியினால் மக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மைத்திரிபால வெற்றியீட்டியதன் பின்னர் பெப்ரவரி மாதமளவில் அரசாங்க மற்றும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்.

சம்பள உயர்விற்கான பொறிமுறைமை உருவாக்கப்படும் வரையில் இடைக்கால கொடுப்பனவாக 5000 ரூபா வழங்கப்படும்.

எனக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

அவ்வாறு பணம் சம்பாதிக்க தேவையென்றால் நான் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

mahinda-vs-ranil

SHARE