சுவிற்சர்லாந்தில் சிறுவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு

147

சுவிற்சர்லாந்தில் ஆண்டுதோறும் 30,000 லிருந்து 50,000 வரை சிறுவர் தாக்குதல் தொடர்பான புகார்கள் பதியப்படுவதாக சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

சூரிச்சை சேர்ந்த UBS Optimus Foundation எனும் அமைப்பு சுவிற்சர்லாந்தில் சிறுவர்கள் தொடர்பில் ஆய்வொன்றை நடத்தியது.

இதில் ஆண்டுதோறும் 30,000லிருந்து 50,000 சிறுவர் தாக்குதல் தொடர்பான வழக்குகள் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளால் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துன்புறுத்தல், புறக்கணிப்பு, வன்முறை, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையை காண்பது என உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சுமார் 423 குழந்தை பாதுகாப்பு ஏஜென்சிகளிடம் இருந்து இத்தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

இதில் மருத்துவமனைகள், பொலிஸ் நிலையங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யும் மையங்களும் அடக்கம்.

மேலும் ஏஜென்சிகளின் சேவைகள், குழந்தைகளின் உண்மையான தேவையை பூர்த்தி செய்யவில்லை என்றும், நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சமமாக அளிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE