ரூ.30 கோடியாக உயர்ந்த பிரபுதேவாவின் சம்பளம்!

666

நடன இயக்குநர், ஹீரோ, இயக்குநர் என்ற பல அடையாளங்களைப் பெற்றிருப்பவர் பிரபுதேவா.

இவர், தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கில் படங்களை இயக்கி வந்த பிரபுதேவா வெடி படத்திற்குப் பிறகு பாலிவுட் பக்கம் சென்றார். இந்தியில் சல்மான்கானை வைத்து ‘வாண்டட்’, அக்ஷய்குமாரை வைத்து ‘ரவுடி ரத்தோர்’, கிருஷ்குமார், சுருதிஹாசன் ஜோடியாக்கி ‘ராமையா வஸ்தாவையா’, சாகித்கபூர், மோனாக்கி சின்ஹாவை ஜோடியாக்கி ஆர்.ராஜ்குமார், அஜய்தேவ்கானை வைத்து ‘ஆக்ஷன் ஜாக்சன்’ ஆகிய படங்களை எடுத்துள்ளார்.

தற்போது இந்திச் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வந்துக்கொண்டு இருக்கும் இவர் இந்தியாவில் மிக அதிக சம்பளம் பெறும் நட்சத்திர இயக்குனராக உருவெடுத்துள்ளார். பிரபுதேவா அடுத்து இயக்கப் போகும் படத்திற்காக ரூ.30 கோடி சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய இயக்குனர் ஒருவர் இவ்வளவு பெரிய தொகை சம்பளம் பெறுவது இதுவே முதல்முறை ஆகும்.

பாலிவுட்டில் இதுவரை 20 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வந்தவர் ரோஹித் ஷெட்டி மட்டுமே. இவரை பின்னுக்கு தள்ளிவிட்டார் இயக்குனர் மற்றும் நடன அமைப்பாளர் பிரபுதேவா. அடுத்து இவர் இயக்கவுள்ள படத்திற்கு ரூ.30 கோடி பேசப்பட்டு, ரூ.17 கோடி அட்வான்ஸும் கொடுத்துவிட்டார்களாம். வேறு எந்த இந்தி இயக்குனரும் இவ்வளவு தொகை சம்பளம் வாங்கியதில்லையாம். இவர் வாங்கும் சம்பளம் இந்தியில் முன்னணி கதாநாயகர்கள் சம்பளத்துக்கு இணையானது என்கின்றனர். இதனால் இந்திபட உலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

SHARE