கடந்த அரசாங்கத்தின் மூலம் செயற்படுத்தப்படவிருந்த வடக்கு அதிவேக வீதி செயற்திட்டம் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் செயற்படுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு கடந்த அரசாங்கத்தில் வீதி செயற்திட்டத்துக்காக மதிப்பீடு செய்யப்பட பணம் குறைக்கப்பட்டு, வீதி வேலைகள் செயற்திட்டம் செயற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தில் எவ்வித அபிவிருத்தி திட்டங்களும் இடை நிறுத்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வடக்கு அதிவேக வீதி கடந்த அரசாங்கத்தின் கீழ் செயற்படுத்த தீர்மானித்திருந்தும் அதற்கான ஆரம்ப நிதி ஒதுக்கீடுகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.