போர்க்குற்றச்சாட்டுகளை இனப்படுகொலை என்று அழைக்க முடியாது-மைத்திரியும் வேதம் ஓத தொடங்கிவிட்டார்

421

 

Mithiripala-Sirisena

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனவழிப்பு குறித்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றமளிப்பதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

, ஈபிடிபி பொதுச்செயலர் டக்ளஸ் தேவானந்தா மற்றும், வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய போதே அவர், இதுகுறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்புக் குறித்து வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தகவல் வெளியிடுகையில்,

வடக்கு மாகாணசபையினால், இனப்படுகொலை குறித்து தீர்மானம், நிறைவேற்றப்பட்டது,

மாகாணசபையின் வரையறைகளுக்கு அப்பாற்பட்டது என்பதே ஜனாதிபதியின் கருத்தாக இருந்தது.

போர்க்குற்றச்சாட்டுகளை இனப்படுகொலை என்று அழைக்க முடியாது.

நல்லிணக்க முயற்சிகளை புதிய அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்ற போது, வடக்கு மாகாண சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறது.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தாக, குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியுடன், அவரது ஆலோசகரும், கிழக்கு மாகாண ஆளுனருமான ஒஸ்ரின் பெர்னான்டோவும் கலந்து கொண்டார்.

 

SHARE