அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிக்கொணரக் கோரியும் யாழ். நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. ‘குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே!’, ‘காணாமற்போனோர், கடத்தப்பட்டோரின் விவரங்களை வெளிப்படுத்து!’ , ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்!’ ஆகிய 3 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னிலை சோசலிஸ கட்சி இந்தப் போராட்டத்தை ஏற்பாடுசெய்திருந்தது. –