காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசேட ஆணைக்குழுவின் அடுத்த அமர்வுகள் திருகோணமலையில்..

418

 

காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசேட ஆணைக்குழுவின் அடுத்த அமர்வுகள் திருகோணமலையில்..

காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவின் அடுத்த அமர்வுகள் திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 28ம் திகதியும் மார்ச் மாதம் 1,2 மற்றும் 3ம் திகதிகளில் திருகோணமலையில் அமர்வுகள் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தக் ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை பெப்பரவரி மாதம் 15ம் திகதி வரையில் நீடித்திருந்தார்.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த ஆணைக்குழுவின் தவணைக் காலத்தை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE